Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..

Tamil Cinema News

இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..

சினிமா, சீரியல் நடிகர்கள், நடிகைகள் என்றாலே செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்பவர்கள். சொகுசான வாழ்க்கையில் சந்தோஷமாக தினமும் வாழ்க்கையை நடத்துபவர்கள் என்ற எண்ணம்தான் பலரது மனங்களில் இருக்கிறது.

நாங்களும் சராசரியான வாழ்க்கையில், கஷ்ட நஷ்டங்களை சந்தித்தவர்கள்தான் என்று தங்களது வாழ்க்கை அனுபவத்தை கூறியிருக்கின்றனர் இந்த நட்சத்திர ஜோடி.

சான்ட்ரா

சான்ட்ரா, கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர். டிவி சேனல்களில் தொகுப்பாளராக அறிமுகமானார். கஸ்தூரிமான் என்ற மலையாள படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம், சிவப்பு எனக்கு பிடிக்கும், உறுமீன், சிங்கம் 3, காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

--Advertisement--

சீரியல் நடிகை

தமிழில், மலையாளத்தில் நிறைய படங்களில் சான்ட்ரா நடித்திருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி நடிகையாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதே போல் டிவி சேனல்களில் சீரியல் நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

பிரஜின்

அதே போல் டிவி சேனலில் தொகுப்பாளராக தன் பயணத்தை துவக்கியவர் பிரஜின். இவரது முழுப் பெயர் பிரஜின் பத்மநாபன்.

அழகான இந்த வாலிபருக்கு துவக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இவர் பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு பெண் ரசிகைகள் அதிகரித்தனர்.

தொடர்ந்து சீரியல் நடிகராக தன் பயணத்தை மாற்றிக்கொண்ட பிரஜின் பல சீரியல்களில் நடித்தார். சின்னதம்பி, காதலிக்க நேரமில்லை, அன்புடன் குஷி போன்ற சீரியல்களில் பிரஜின் நடித்தார்.

படங்களில் நடித்தார்

பிறகு பழைய வண்ணாரப்பேட்டை, சுற்றுலா, எங்கேயும் நான் இருப்பேன், அக்கூ போன்ற சில படங்களில் நடித்தார்.

வீடியோ ஜாக்கியாக, சீரியல் நடிகராக, சினிமா நடிகராக பலகட்ட முயற்சிகளை செய்தும், பிரஜினுக்கு பெரிய அளவில் சினிமாவில் மார்க்கெட் அமையவில்லை. முன்னணி நடிகராக உயர முடியவில்லை.

இதையும் படியுங்கள்: இது ஒன்னே ஒன்னு தான் இப்போ குறைச்சல்.. எமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோ.. கடுப்பில் ரசிகர்கள்..

காதல் திருமணம்

இந்நிலையில்தான் பிரஜின், சான்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. நட்சத்திர தம்பதியான இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வருகின்றன.

நிறைய கஷ்டங்களை…

இந்நிலையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய அவர்கள் தங்களது வாழ்வில் நேர்ந்த கசப்பான அனுபவங்களை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிரஜின் பத்மநாபன் – சான்ட்ரா ஆகியோர் வெளிப்படையாக கூறியிருக்கின்றனர்.

திருமணத்துக்கு பிறகு நாங்கள், வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்தோம். சினிமா, சீரியல்களில் போதிய வாய்ப்புகள் அற்ற நேரமாக அது இருந்தது. ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒருவருக்கு வாய்ப்பே இருக்காது என்ற சூழலில், மிகவும் மோசமான நிலையில் வாழ்க்கை இருந்தது.

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களையும் மிகவும் கஷ்பட்டே வளர்த்தோம். எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. பிரஜின் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தைகளை பார்த்துக் கொள்வார்.

இதையும் படியுங்கள்: நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு எனக்கு நடந்த கொடுமை.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

இரண்டு பேருக்குமே நல்ல புரிதல் இருந்ததால்தான் கஷ்டமான அந்த மோசமான காலகட்டத்தை கடந்து வர முடிந்தது என்று, அவர்கள் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கின்றனர்.

இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட தங்களது வறுமை வாழ்க்கையை இந்த நேர்காணலில் பிரபல நட்சத்திர ஜோடியான பிரஜின் – சான்ட்ரா வெளிப்படுத்தியது, ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top