ஹீரோயின் ஆன ஷிவானி நாராயணன்..! – ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்டுடும்..!

ஷிவானி நாராயணன் : கேரளா செல்லும் அனைவரும் சிப்ஸ் வாங்குகிறார்களோ, இல்லையோ கேரளா லாட்டரி சீட்டை வாங்கி வைப்பது இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. எப்படியாவது தங்கள் வாழ்வில் பணம் கிடைக்காத, ஒரு அதிர்ஷ்டம் வாயில் கதவை திறக்காத என்பது அவர்களின் நம்பிக்கை.

அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை மையமாகக் கொண்ட இந்தப் படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. குறிப்பாக கேரளாவில்  விற்கப்படும் லாட்டரியை மையமாகக் கொண்டு இதன் திரைக் கதை அமைந்துள்ளது.

இந்த படத்துக்கு “பம்பர்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் 8 தோட்டாக்கள் பட நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் படத்தை இயக்குனர் முத்தையாவின் முன்னாள் உதவியாளர் எம். செல்வகுமார் இயக்குகிறார்.வேதா பிக்சர்ஸ்  மற்றும் தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மேலும் வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் கதாநாயகி நமது  மிகவும் பிரபலமானவர். இவர் அடித்த லூட்டியை நாம் குத் வித் கோமாளியில்  நிறைய பார்த்து இருக்கலாம். இவர் வேறு யாருமில்லை நம்ம ஷிவானி நாராயணன்.

 ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எவ்வாறு கைகொடுக்கிறது அந்த அதிர்ஷ்டத்தின் மூலம் அவன் எப்படி உயர்ந்து இருக்கிறான் என்ற கருத்தை இந்த படம் சொல்லலாம் அல்லது நம்பி ஏமாந்த கதையாக கூட இருக்கலாம் என்பது என்னுடைய யூகம்.

புது முகங்களைக் கொண்டு இயக்கப்பட கூடிய இந்தப் படம் எப்படி இருக்கும். ரசிகர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைக்குமா? இதுபோன்ற கேள்விகளுக்கு படம் வெளிவந்த பின்பு தான் நாம் பதிலளிக்க முடியும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி ரசிகர்களை கவரும்படி அமைந்துவிட்டால் நிச்சயம் அது வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு வலம் வரும் என்பது உண்மை.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …