சருமம் பொலிவுடன் இருக்க உதவும் வெண்ணெய்.

 

100 கிராம் வெண்ணெய்யில்  21 கிராம் மோனோ அன்சாச்சுரேட் 3 கிராம் பாலி அன்சாச்சுரேட் 51 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ஒமேகா 3 ஒமேகா 6 ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. 

வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.

வெண்ணையில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பை வலுப்படுத்த உதவுகிறது. 

2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அப்படி கழுவி வந்தால் சருமம் பொலிவுடன் மிருதுவாகவும் இருக்கும். 

ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இப்படி தொடர்ந்து செய்வதால் முகப்பரு மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாக காட்சியளிக்கும். 

வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து பிரஷ் மூலம் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.

 ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூச வேண்டும். இதை 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள சருமத்தில் எந்த விதமான மங்கு ஏற்படாது. 

சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய்யைப் போலவே மிருதுவாகவும் பிரகாசமாகவும் மாறும். 

வெண்ணெய்யில் உள்ள செலினியம் மற்றும் வைட்டமின் இ சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கவும் அடிக்கடி ஏற்படும் அரிப்பு எரிச்சல் இவற்றை தடுக்கக்கூடிய ஆற்றல் வெண்ணெய்க்கு உள்ளது. 

வெண்ணெய்யுடன் சிறிதளவு தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு விரைவில் குணமாகும். 

வெண்ணெய் சிறிதளவு பாதாம் பருப்பு ஒன்று சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்கு அரைக்கவும் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் வரை ஊற விடவேண்டும்.

 பின்னர் பஞ்சினை எடுத்து அதை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகி முகம் பொலிவு பெறும்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …