இரண்டாம் திருமணம் செய்யும் தனுஷ் முதல் மனைவி ஐஸ்வர்யா..? – வரதட்சணை இத்தனை கோடியா..?

aகடந்த 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.

இடையில் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். சமீபத்தில் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் தனுஷை பிரிந்து விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா தனுஷ்

அதேபோல நடிகர் தனுஷும் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து விட்டதாகவும் இனிமேல் சேர்ந்து கணவன் மனைவியாக சேர்ந்து வாழப்போவதில்லை என்னுடைய குழந்தைகளுக்காக நண்பர்களாக வாழ்க்கையை தொடர போகிறோம் என்று அறிக்கை வெளியிட்டனர்.

இவருடைய இந்த அறிக்கை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே நடிகர் தனுஷின் நடவடிக்கைகள் மீது கொக்குமாக்கான கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.

மட்டுமில்லாமல் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய கணவரை பிரிந்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தன் கணவரை பிரிந்து விட்டார் என்ற தகவல் ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இது குறித்த விவாதங்கள் இணைய பக்கங்களை பார்க்க முடிந்தது. பலரும் பல்வேறு காரணங்களை இதுதான் விவாகரத்துக்கு காரணம் என்றெல்லாம் கூறி வந்தனர்.

ஆனால் இது குறித்து ஐஸ்வர்யாவோ அல்லது தனுஷோ வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.

இரண்டாம் திருமணம்

அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஐஸ்வர்யா என்றும் வரதட்சணை மட்டும் 500 கோடி தாண்டும் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

ஆனால் இது குறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்தோ.. ஐஸ்வர்யா தரப்பில் இருந்தோ இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கோடம்பாக்கம் வட்டாரத்தில் வாய் வழியாகவே இந்த தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

தற்போது தான் லால் சலாம் படத்தை இயக்கி முடித்திருந்த ஐஸ்வர்யா முறையாக நடிகர் தனுஷிடம் விவாகரத்து பெறவில்லை என்று தெரிகிறது. மேலும், நடிகர் தனுஷ் தன்னுடைய விவாகரத்து பற்றி யோசனையை கைவிட்டு விட்டார் இருவரும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன.

இந்நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார் என்ற தகவல் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா..? அல்லது வதந்தியா..? என்று நடிகர் ரஜினிகாந்த் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்தால் மட்டுமே இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகன் தமிழ் வளர்ந்து வரக்கூடிய ஒரு திரைப்பட நடிகை கடந்த 1994 ஆம் …