பிராமணர் என்பதால் முன்னணி நடிகைக்கு வாய்ப்பு தர மறுத்த பா.ரஞ்சித்..! – வெளுத்து போன சாதி ஒழிப்பு சாயம்..!

தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்றும் இன்றும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். ஆரம்ப காலத்தில் வில்லனாக அறிமுகமாகி தனது ஸ்டைல் மற்றும் யதார்த்த நடிப்பால் நாயக கதாநாயகனாக மாறி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தை பெற்றவர்.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகர் என்ற பெருமை பெற்றவர். இவர் திரைப்படங்களில் காமெடி, காதல், ஸ்டாண்ட் என்று எதற்குமே பஞ்சம் இருக்காது ஒரு கலவையாக அனைவரும் விரும்பும் குடும்பப்பாங்கான திரைப்படங்களாகவே அதிகம் இருக்கும்.

தமிழ் அல்லாது பிற மொழிகளிலும் நடித்து அங்கும் தனது சிறந்த நடிப்பால் பல ரசிகர்களை பெற்றவர். 16 வயதினிலே தொடங்கி அண்ணாத்த வரைக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு மெருகேறிக் கொண்டே தான் சொல்கிறது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்திருந்தாலும் தமிழ் திரையுலைகளும் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். கடந்த 2018ல் இவர் நடித்த காலா திரைப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார்.

முதலில் இக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சுகன்யா தான் தேர்வு செய்யப்பட்டிருந்தாராம். ஆனால் நடிகை சுகன்யா பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இத்திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை என்று தகவல்கள் வெளியானது.

---- Advertisement ----

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சமுத்திரகனி, ஹிமா குரோஷி, நானா பட்டேகர், மணிகண்டன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். சுகன்யா உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காக வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

அதற்கு படக்குழுவினர் சுகன்யா அவர்களால் நடிக்க முடியாத காரணத்தாலேயே அவர் நடிக்கவில்லை என்றும் வேறு எந்த காரணமும் கிடையாது என்று விளக்கம் அளித்தனர்.

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற அப்டேட் வெளிவந்ததிலிருந்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

---- Advertisement ----