“குட்டீஸ் விரும்பும் கடலைப்பருப்பு சட்னி..!” – இப்படி செய்தா நீங்க தான் நளன்..!

இட்லி, தோசைக்கு அடிக்கடி தேங்காய் சட்னி, நிலகடலை சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என வைத்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்கள் ஒரு மாற்றத்திற்காக கடலைப்பருப்பு சட்னி அரைத்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் நாக்குக்கு சுவை தூக்கலாக இருப்பதோடு இன்னும் இரண்டு இட்லி, தோசை சாப்பிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Kadalai Paruppu Chutney

அப்படிப்பட்ட கடலைப்பருப்பு சட்னியை எப்படி அரைப்பது என்பது பற்றி விரிவாக எந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கடலைப்பருப்பு சட்னி அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

1.கடலைப்பருப்பு நான்கு டீஸ்பூன்

2.வரமிளகாய் 3

3.பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது

---- Advertisement ----

4.தக்காளி ஒன்று

5.பெருங்காயத்தூள் அரை சிட்டிகை

7.உப்பு தேவைக்கு ஏற்ப

Kadalai Paruppu Chutney

தாளிப்பதற்கு

7.எண்ணெய் ஒரு டீஸ்பூன்

8.கடுகு அரை டீஸ்பூன்

9.கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் லேசாக சூடாக்கிய உடனே கடலைப்பருப்பு, வர மிளகாய் இரண்டையும் சேர்த்து பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Kadalai Paruppu Chutney

பிறகு இதே வாணலியில் நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.

இது சூடு ஆறிய பிறகு கடலைப்பருப்பு, வரமிளகாய் வதக்கி வைத்திருக்கும் தக்காளி வெங்காயம் இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து விடுங்கள்.மேலும் அரைக்கும் போது இதற்கு தேவையான உப்பு மற்றும் நீரை சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்திருக்கும் இந்த கலவையை வேறொரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

Kadalai Paruppu Chutney

இதனை அடுத்து மீண்டும் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி கடுகை போட்டு பொரிக்க விடவும். கடுகு பொரிந்தவுடன் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து நீங்கள் பௌலில் வைத்திருக்கும் சட்னியோடு கலந்து விடுங்கள் இப்போது சுவையான கடலைப்பருப்பு சட்னி தயார்.

---- Advertisement ----