சந்திரமுகி 2 – OTT ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா..? – என்ன சொல்றீங்க..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஆத்மார்த்தமான  நடிகராக விளங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 ல் நடித்து வருகிறார். சந்திரமுகி படத்தை பி வாசு இயக்க இந்த படத்தில் ஜோதிகா வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். மிக வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை ரஜினிகாந்துக்கு பெற்றுத்தந்தது.

 எப்போதுமே இரண்டாவது பாகத்தை விரும்பாத ரஜினிகாந்த் எந்த படத்தில் நடிக்க மாட்டார் என்பதால் இவரின் ஆத்மார்த்தமான சீடரான ராகவா லாரன்ஸ் தற்போது மைசூரில் நடக்கின்ற சூட்டிங்கில்  மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால் ஏற்கனவே காஞ்சனா, காஞ்சனா 2, முனி போன்ற வெற்றி படங்களில் வித்தியாசமான வேடத்தில் நம்மை அசத்திய  ராகவா லாரன்ஸ்  இந்தப் படத்தில்  பிரகாசமாக ரசிகர்களை கொள்ளை கொள்ளும் வகையில் அசத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே ஓடிடி யில் காப்பிரைட் வாங்கி  வைக்கக்கூடிய பிசினஸ் மிகவும் சூடு பறக்க கூடிய நிலை திரைத்துறையில் உள்ளது. அந்த வரிசையில் ஏற்கனவே  தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவரவுள்ள மாவீரன் படங்களை அமேசான் நிறுவனம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது இந்த சந்திரமுகி 2 படத்தை பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் 7 கோடிகளை கொடுத்து கைப்பற்றியுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தப் படத்துக்காக ராகவா லாரன்ஸ் தன் உடம்பையே இரும்பாக மாற்றி இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் 5 ஹீரோயினிகள் இந்த படத்தில் நடித்து வருவது மேலும் ஆவலை அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் மைசூரில் நடந்து வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தில் நடித்த ராதிகா வடிவேலு லாரன்ஸ் போன்றவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் உள்ளது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படம் திரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …