நஷ்ட ஈடு கொடுத்தே ஆக வேண்டும் விநியோகஸ்தர்கள் போர்க்கொடி நோ…நோ முடியவே முடியாது – சார்மி!

தெலுங்கு நடிகையான சார்மி தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டு கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் நடித்த காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு போன்ற படங்கள் மிக நல்லமுறையில் ஓடியது. இந்நிலையில் இவருக்கும் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரான பூரிக்கும் இடையே கசமுசா உள்ளதாக சில கிசுகிசுக்கள் வெளிவந்தது. இதனை இவர் மறுத்து அறிக்கைகளை வெளியிட்டது அனைவருக்கும் தெரியும்.

தெலுங்கு டைரக்டரான பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து இவர் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது விஜய்  தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த திரைப்படமானது ஆட்டர் பிளாப்பை சந்தித்துள்ளது.

இதற்கு காரணம் விஜய் தேவரகொண்டா வாயால் வெட்ட பேச்சால் தான் இந்த நிலைமையை அடைந்து விட்டார் எனவும் கேஷ்டேக்கு பதிலளிக்காமல் இருந்திருந்தால் இந்த படத்துக்கு இந்த கதி வந்திருக்காது என்று மும்பையைச் சேர்ந்த தியேட்டர்  உரிமையாளர்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் படுதோல்வி காரணமாக அதிர்ச்சிக்குள்ளான சார்மி வலைதள பக்கத்தில் இருந்து விலகிவிட்டார். மனசாட்சி மிக்க விஜய்தேவரகொண்டா தன்னுடைய சம்பளத்தில் இருந்து சுமார் ஆறு கோடி ரூபாயை இவர்களிடம் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் எந்த படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதால் லாபத்தில் பங்கு வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் இவர் இவ்வாறு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.

இதனை அறிந்து கொண்ட வினியோகஸ்தர்கள் படத்தில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதால் உடனடியாக நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பேசி போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். அனைத்து வினியோகஸ்தர்களும் தங்களுடைய முதலீட்டில் 70 சதத்தை இழந்து இருப்பதாக தெரிகிறது.

எனவே வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரான சார்மி யை சந்தித்து பேசி இது நிமித்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிற நிலையில் சார்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மறுத்துவிட்டதாகவும் அத்தோடு நஷ்ட ஈடு வழங்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

 இதனை அடுத்து இந்த பிரச்சனையை தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை வினியோகஸ்தர்கள் கொண்டு செல்வார்கள் என்று தெரிகிறது.