வீட்ல தனியா இருக்கேன்.. ஜாலியா இருக்கலாம் வா.. பாய்ந்து சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வியாசர் பாடி : வீட்டில் தனியாக இருக்கிறேன் வா ஜாலியா இருக்கலாம் என்று தன்னுடைய காதலனுக்கு Whatsapp மூலம் மெசேஜ் வந்ததும் வாய்ப்புக்காக காத்திருந்த காதலன் பாய்ந்து சென்றுள்ளார்.

ஆனால், அங்கு நடந்த சம்பவம் இப்பொழுது ஒட்டுமொத்த சென்னையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த மென்பொருள் பணியாளர் விக்னேஷ் என்ற ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பார்த்த ஒரு பெண்ணுடன் பழகி இருக்கிறார். வெறும் ப்ரொபைல் பிக்சரை மட்டுமே பார்த்து அந்த பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார் விக்னேஷ்.

இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் இவர்களுடைய நெருக்கம் தொலைபேசியின் மூலம் அதிகரித்து இருக்கிறது. வீடியோ காலில் கூட காதலியின் முகத்தை பார்த்தது கிடையாது. சமூக வலைத்தள பக்கத்தில் இருக்கும் புகைப்படம் தான் உண்மையான புகைப்படம் என எல்லை மீறி பழகி வந்திருக்கிறார்.

வியாசர் பாடி

இப்படியே இவர்களுடைய காதல் வளர்ந்து கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லை… தனியா தான் இருக்கேன்.. வந்தால் செம ட்ரீட் இருக்கு.. என்று மெசேஜ் செய்திருக்கிறார் காதலி.

காய்ந்த மாடு.. கம்பில் புகுந்த.. கணக்காக காதலியின் அந்த மெசேஜை பார்த்ததும் பாய்ந்து சென்று இருக்கிறார் காதலன். காதலி கொடுத்த விலாசத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்த காதலன் காதலியை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

ஏனென்றால் அவர் இத்தனை நாட்களாக வெறும் ப்ரொஃபைல் பிக்சரை மட்டுமே பார்த்து பழகி வந்தவர். இவர் வேறு பெண் போல் தெரிகிறாரே.. என்று அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார். இருந்தாலும் பேச்சை தொடர்ந்து இருக்கிறார்.

சிறிது நேரத்தில் அங்கே மேலும் இரண்டு பேர் வந்திருக்கிறார். வந்தவர்கள் இளைஞர் விக்னேஷை பிடித்து கழுத்தில் கத்தி வைத்து கையில் வைத்துள்ள படம் நகைகளை கேட்டு இருக்கின்றனர்.

25 ஆயிரம் ரூபாய்..

என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறியிருக்கிறார் விக்னேஷ். ஆனாலும் நீ தான் என் பொருள் பணியாளர் என்று கூறினாயே அப்படி என்றால் உன்னுடைய வங்கிக் கணக்கில் நிச்சயம் பணம் இருக்கும். அதிலிருந்து பணத்தை எங்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பு என்று கூறி விக்னேஷ் வங்கி கணக்கில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்குக்கு Gpay மூலம் பெற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து எங்களுக்கு இந்த பணமெல்லாம் பத்தாது மேலும் 15 ஆயிரம் வேண்டும் என கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். பயந்து போன விக்னேஷ் இப்போது என்னிடம் பணம் இல்லை.. வீட்டுக்கு சென்றால்.. கண்டிப்பாக நான் ரெடி செய்து விடுவேன்.. நான் சென்று பணத்தை ரெடி செய்துவிட்டு வந்து கொடுத்து விடுகிறேன்.. என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட அந்த கொள்ளையர்கள் விக்னேஷை விடுவித்து இருக்கின்றனர். அந்த வீட்டை விட்டு வெளியே வந்த விக்னேஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விஷயங்களை கூறி புகார் கொடுத்திருக்கிறார்.

அதிர்ந்து போன போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அந்த வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அந்த வீட்டில் இருந்த கிருஷ்ணன், எழுமலை மற்றும் அந்த இளம்பெண் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அதே நாளில் மேலும் இதுவரை அவர்கள் இதே போல பணம் பறிக்க செட்டப் செய்து வைத்திருக்கிறார்கள் என்ற விவரமும் தெரிந்திருக்கிறது.

மட்டுமில்லாமல் அவர்களுடைய வங்கி கணக்கு விவரங்களை பார்த்தபோது ஏற்கனவே பலரை மிரட்டி இப்படி பணம் வாங்கி இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த விஷயத்தை வெளியே போனால் மானக்கேடு என்பதால் பலர் புகார் கொடுக்க மறுத்து சென்று விட்டனர். ஆனால், விக்னேஷ் துணிச்சலாக புகார் கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாகத்தான் இருவரும் தற்போது பிடிபட்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை மட்டும் பார்த்து பழகக் கூடிய இளைஞர்களுக்கு இந்த சம்பவம் பாடமாக இருக்கும் என நம்பலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …