மதுரை ஸ்டைல் சிக்கன் கோலா உருண்டை குழம்பு..! – செய்வது எப்படி..? – வாங்க பாக்கலாம்..!

சிக்கனில் வறுவல், சிக்கன் 65, குழம்பு செய்து சாப்பிட்டுருப்பீர்கள். ஆனால் மட்டன் போலவே சிக்கனிலும் நாவூறும் கோலா உருண்டை ( Chicken Cola Balls Gravy ) செய்யாலம் என்பது உங்களுக்கு தெரியுமா..? வாங்க எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  1. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  2. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  3. பட்டை – 2
  4. கிராம்பு – 2
  5. எண்ணெய் – தேவையான அளவு
  6. உப்பு – தேவையான அளவு
  7. பெரிய வெங்காயம் – 1
  8. தக்காளி – 1
  9. புளி – சிறிது நெல்லிக்காய் அளவு
  10. பூண்டு – சிறிது அளவு
  11. இஞ்சி – சிறிது அளவு
  12. சோம்பு – 1 டீஸ்பூன்
  13. கசகசா – 1 டீஸ்பூன்
  14. உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:
  15. சிக்கன் (எலும்பில்லாதது) – கால் கிலோ
  16. வெங்காயம் – 1
  17. பச்சை மிளகாய் – 3
  18. சோம்பு – 1 ஸ்பூன்
  19. மிளகு – 1 ஸ்பூன்
  20. பொட்டுக் கடலை – 2 ஸ்பூன்
  21. தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
  22. உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு தேங்காய் துருவல், சோம்பு கசகசா, இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.

பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும். வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்த பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது ருசியான சிக்கன் உருண்டை குழம்பு ரெடி.