பிள்ளைப்பேறு வரமளிக்கும் உதிர காளியம்மன்.

கோவை மாவட்டம், ஆனைமலை தாலுக்காவில் அமைந்துள்ள செம்மாணபதியில் பகுதியில் உதிர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இது பொள்ளாச்சியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இக்கோயிலானது தென்னந்தோப்புக்குள் திறந்த வெளியில் அமைந்துள்ளது. ஆலமரத்தடியில் கருங்கலால் ஆன அம்மன் அம்மன் பாடத்தில் வரும் அம்மனைப் போல மஞ்சள் சாத்தி வெள்ளி கண் அடக்கத்துடன் பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறாள்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். உக்கிரமாக இருக்கும் இந்த அம்மன் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு பிள்ளைப்பேறு  பாக்கியத்தை அள்ளித் தருவதால் தான் புத்திர காளி என்ற பெயர் மருவி உதிரகாளி என  அப்போது அழைக்கப்படுகிறது 

குழந்தை பேறு பெற செய்ய வேண்டிய வழிமுறை:

பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகள் இந்தக் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பூஜை செய்யும் நபரிடம் தங்களின் நிலையை கூறினால் அவர் அம்மானின் உடலில் சாத்தி இருக்கும் மஞ்சளை எடுத்து மருந்தாக தருவார். அந்த மஞ்சளை குறைந்தபட்சம் செவ்வாய் வெள்ளி தொடர்ந்து ஆறு வாரம் சென்று வாங்கி அருந்த வேண்டும். அது மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் புடவையிலுள்ள முந்தானையை கிழித்து தொட்டில் கட்டி தொங்க விடுவதும் மூலம் விரைவில் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றுவரை உள்ளது.

எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் எந்தவிதமான கட்டிட வேலைப்பாடுகள் இல்லை. மேலும் அம்மனின் உருவச் சிலைக்கு முன்னால் அம்மன் விளையாடுவதற்காக ஊஞ்சல்  வைக்கப்பட்டுள்ளது. முக்கிய தினங்களில் மட்டுமே அபிஷேகம். குறிப்பாக செவ்வாய் வெள்ளிகளில் நடைபெறும். அம்மாவாசை அன்று அன்னதானம் உண்டு.

மேலும் இங்கு இரண்டு நாகர் சிலைகள் உள்ளது. இதுவும் வழிபாட்டில் வழிபடுகின்றனர். குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் மன உருக்கத்தோடு மிக நல்ல முறையில் பிரார்த்தனை மேற்கொள்வதால் மிக விரைவில் பிள்ளை பேறு கிடைக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் வேண்டாம்.

இந்தக் கோயிலுக்கு செல்ல பொள்ளாச்சியிலிருந்து செம்மணாபதி செல்லும் 12 A  பேருந்தில்  அல்லது உங்கள் சொந்த வாகனத்திலும் செல்லலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …