“ட்ரெஸ் இல்லாம போட்டோ அனுப்புங்க..” என்று கேட்ட ஆசாமிக்கு சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..!

பாடகி சின்மயி ( Chinmayi ) சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர். தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார்.

இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.இதனிடையே, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சின்மயி.இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற இலச்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதற்கு சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அவரது டுவிட்டர் பக்கத்தில், எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே.. நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பை எல்லாம் எதிர்பார்க்க பண்ணக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம். என பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், ஆடையின்றி இருக்கும் போட்டோவை அனுப்புங்க என்று கேட்ட இணைய ஆசாமி ஒருவருக்கு செருப்படி ரிப்ளை ஒன்று கொடுத்து அதனை ஸ்க்ரீன் ஷாட் வேறு எடுத்து தனது சமூக வலைதள கைபிடியில் பதிவிட்டுள்ளார் அம்மணி.