சித்ரா பவுர்ணமி சிறப்புகள்.

பௌர்ணமி என்றாலே சந்திரனுக்கு விசேஷமான பூஜைகள் செய்யக்கூடிய நாள் என்பது அனைவரும் அறிந்தது தான் பௌர்ணமிகளிலேயே சிறந்த பௌர்ணமி என்று அறியப்படுவது என்ற சித்ராபௌர்ணமி தான்.

இந்த சித்ரா பவுர்ணமியானது வருகின்ற ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அன்று வருகிறது. மாத பவுர்ணமிகளில் சிறிது கலங்கத்தோடு விளங்கும்  நிலவானது சித்ரா பௌர்ணமி அன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது.அன்று சூரியனும் ,சந்திரனும் உச்ச நிலையில் இருப்பார்கள். எனவே அன்று எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

சித்ரா பௌவுர்ணமி அன்று அதிகாலையே நீங்கள் எழுந்து குளித்து உணவேதும் அருந்தாமல் இருந்து தெய்வத்தை வணங்கி வந்தால் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் கூறிய கருத்து.மேலும் எமதர்ம ராஜனின் கணக்குப் பிள்ளையான சித்திரகுப்தர் எந்த நாளில் பிறந்ததாகவும் அன்று எல்லா மக்களின்  தர்ம, அதர்ம கணக்குகளை தமது ஏறி எழுதி வைப்பார் என்பது ஐதீகம்.

சிறப்பு மிக்க இந்த சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனை வழிபட்டால் நமக்கு சொர்க்க பதவி நாம் செய்த நன்மை, தீமைக்கு ஏற்ப கிடைக்கும். பாவ கணக்குகளை தீர்த்துக்கொள்ள அந்த நாளில் அன்னதானம் செய்வதை சிறப்பாக கூறியிருக்கிறார்கள் அதுபோல் ஆடை இல்லாதவர்களுக்கு நீங்கள் வஸ்திர தானமும் செய்யலாம்.

இந்நாளில் சித்திர அன்னத்தை படைத்து அம்மனை வழிபட்டு வருவதாலும், சித்திரகுப்தனை நினைத்து சித்திர குப்தருக்கு உரிய ஸ்லோகங்களை சொல்லுவது  உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு அனைத்து விதமான செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் திருமணமாகாதவர்கள் இந்த நாளில் அம்மனுக்குஉடை,கிராம்பு, மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், பச்சைக் கற்பூரம், தாம்பூலம் இவற்றை படைத்து வழிபடுவதின் மூலம்  திருமண யோகமும் விடியலைத் தேடும் விரைவில் கிட்டும்.

சித்திரகுப்தர் உரிய மந்திரம்

சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்.

லேகணிபத்த தாரிணம்

சித்தர ரக்னாம்பரதரம்

மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்.

இந்த மந்திரத்தை குறைந்தது ஒன்பது முறை ஜெபித்து வந்து சித்ரா பவுர்ணமியின் அனைத்து சம்பத்துக்களையும் அடையுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …