“தமன்னா முதல் ஐஸ்வர்யா லட்சுமி வரை..!” – பயன்படுத்தும் மேக்கப் டிப்ஸ் உங்களுக்காக ..!

என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அழகை ஆராதிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் தன்னை அழகாக வெளிப்படுத்த மேக்கப் போட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுறை இடம் காணப்படுகிறது.

அந்த வகையில் சினிமா துறையில் பிரபலமான நடிகைகளாக இருக்கும் தமன்னா முதல் ஐஸ்வர்யா லட்சுமி வரை அவர்கள் தங்கள் கூடுதல் அழகுக்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களை நீங்கள் மேக்கப் செய்யும்போது பயன்படுத்தக்கூடிய அளவில் டிப்ஸாக கொடுத்திருக்கிறார்கள்.

அந்த டிப்ஸை நீங்களும் பயன்படுத்துவதன் மூலம் உலக அழகியாக ஜொலிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட அழகிகள் கொடுத்த அழகியல் மேக்கப் டிப்ஸ் என்ன என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சினிமா பிரபலங்களின் மேக்கப் டிப்ஸ்

பால் போல வெள்ளை நிறத்தில் இருக்கும் மில்க் பியூட்டியாக பலரின் மனதை கொள்ளை கொண்ட தமன்னா எப்போதும் வேதிப்பொருட்கள் கலந்து இருக்கக்கூடிய மேக்கப் பொருட்களை தேர்வு செய்ய மாட்டாராம். அது மட்டுமல்லாமல் வாரத்துக்கு ஒருமுறை ரோஸ் வாட்டரை குளியலுக்கு பயன்படுத்தும் போது பயன்படுத்தக்கூடிய பழக்கத்தை இன்று வரை கடைபிடித்து வருவதால் தான் அவர் மில்க் பியூட்டியாக திகழ்கிறார்.

மலையாள நடிகையாக அறிமுகமாகி அதனை அடுத்து தமிழில் பட்டையை கிளப்பி வரும் சம்யுக்தா மேனன் நேச்சுரல் டைப் மேக்கப் பொருட்களை மட்டுமே அதிக அளவு பயன்படுத்துவர். அதுமட்டுமல்லாமல் அதிகமாக மேக்கப்புக்கு முக்கியத்துவம் தராத இவர் லைட்டாக மேக்கப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் தான் இப்படி அழகோடு இருக்கிறார்.

---- Advertisement ----

நடிகை அமிர்தா ஐயர் அதிகளவு லிக்விட் டைப் லோஷன்  மட்டுமே பயன்படுத்துகிறார். இதுதான் இவரது முக பளபளப்பிக்கும் மேனி வனப்புக்கும் மிகவும் முக்கியமான காரணமாகும்.

டஸ்கி ஸ்கின் அழகி ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் சிம்பிளான மேக்கப் மட்டுமே விரும்புவார்.இதனால் அதிக மேக்கப் போடாமல் இவர் நேச்சுரலாக படங்களில் நடிப்பது இன்றுவரை இயல்பான தோற்றத்தை இவருக்கு கொடுத்துள்ளது.மேலும் மேக்கப்புக்கும் இவர் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவார்.

இந்துஜா மேக்கப்புக்கு எப்பொழுதும் டார்க் டோனில் இருக்கக்கூடிய பொருட்களை அதிகளவு விரும்புவாராம். மேலும் சர்க்கரை சேர்க்காத மேக்கப் பொருட்களை அதிகளவு இவர் பயன்படுத்துகிறார்.

ஸ்கின் டோன் மேக்கப் பொருட்களை அதிகளவு பயன்படுத்தக்கூடிய ஐஸ்வர்யா லட்சுமி பிரைட் கலர்களை தவிர்த்து லைட் கலர் பவுண்டேஷங்களை அதிகம் பயன்படுத்துவார்.

நீங்களும் எந்த பிரபலங்களின் மேக்கப் டிப்சை பயன்படுத்தி இனி உங்கள் மேக்கப் பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு அறிவு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

---- Advertisement ----