ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த காபி வித் காதல் படக்குழு..! – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

காபி வித் காதல் பட தலைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது எப்படி இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள். இந்தப் படத்தை உள்ளத்தை அள்ளித்தா படத்தை டைரக்ட் செய்து நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட  சுந்தர் சி தான் இயக்குகிறார்.

இந்த படமும்  அதே  நகைச்சுவை உணர்வோடு இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.இந்தப் படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த் ,மாதவி சர்மா, அமிர்தா, ஜீவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா  படத்துக்கான இசையை அமைத்து இருக்கிறார்.

 தமிழகத்தைப் பொருத்தவரை ரெட் ஜெய்ண்ட மூவி  அதிகளவு படங்களை  வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்த படத்தையும் ரெட்  ஜெய்ண்ட தான் முக்கிய திரையரங்குகளில் வெளியிடக்கூடிய உரிமையை  பெற்றுள்ளது.

நீண்ட காலத்துக்குப் பின்பு தமிழக  ரசிகர்களை நகைச்சுவை மழையில் நனைக்க  இந்த காபி வித் காதல் படம் ஒரு நல்ல நகைச்சுவை படமாக அமையும். நாமும் வாய் விட்டு சிரிக்க அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இது போன்ற படங்களை பார்ப்பதின் மூலம் நமது மனநிலை மேலும் உற்சாகமடையும்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் எப்படி காமெடியில் கலக்கி இருந்தாரோ, அதேபோல் இந்த படத்திலும் தொடர்ந்துவரும் காமெடிகளால் அரங்கம் அதிரும் அளவுக்கு  கைதட்டல்கள் கிடைக்கும் அந்த அளவுக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

ஏற்கனவே சுந்தர் சி நகைச்சுவை படங்களை இயக்குவதில் வல்லவர். கரும்பு தின்ன கூலியா கொடுக்கவேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப நகைச்சுவை பகுதியை மிகவும் நேர்த்தியான முறையில் இயக்கி இருக்கும் சுந்தர் சி யின் படம் எப்போது வெளிவரும் என்று ஆவலோடு காத்திருக்க அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வந்துள்ளது.

ரெட் ஜெய்ண்ட நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தேதியை அறிவித்து உள்ளது. எனவே இந்த பட புரமோஷன் வேலைகளில் அனைவரும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில்   வெளியாகலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …