வீட்டை இழக்கும் தனுஷ் குடும்பம்..? யார் இந்த பெரிய போத்ரா.. தலை மறைவான சின்ன போத்ரா..!

வீட்டை இழக்கும் தனுஷ் குடும்பம்..? யார் இந்த பெரிய போத்ரா.. தலை மறைவான சின்ன போத்ரா..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். தனுஷ் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே தனுஷிற்கு போயஸ் கார்டனில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது.

இடையில் அங்கு வீடு கட்டி அதில் அவர் குடிப்புகுந்த வீடியோக்கள் கூட வெளியானது. ஆனால் அந்த சமயத்தில் தனது மனைவியை பிரிந்து விட்டார் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் வீட்டிற்கும் பிரபல பைனான்சியரான முகுந்த் போத்ராவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

தனுஷ் வீடு சர்ச்சை:

இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையில்தான் அந்த வீடு கட்டப்பட்டது என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

வீட்டை இழக்கும் தனுஷ் குடும்பம்..? யார் இந்த பெரிய போத்ரா.. தலை மறைவான சின்ன போத்ரா..!

அவர் கூறும் பொழுது முகுந்த் போத்ரா என்பவர் பெரிய பின்னணியை கொண்ட ஒரு பைனான்சியர் ஆவார். இவர் ரஜினி மீதும் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா மீதும் ஏற்கனவே வழக்கு தொடுத்து இருக்கிறார். முகர்ந்த் போத்ராவை பொருத்தவரை அவர் பெரிய பெரிய ஆட்களுக்கு மட்டும்தான் பைனான்ஸ் வழங்குவார்.

பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களுக்கெல்லாம் இவர் பைனான்ஸ் தொகை வழங்குவது உண்டு. பெரிய பெரிய அதிகாரிகளே அதனால் அவரைப் பார்த்தால் பயப்படுவது உண்டு. ஏனெனில் அரசியல் செல்வாக்கு இவருக்கு அதிகமாக உண்டு.

பிரபல ஃபைனான்சியர்:

எந்த கட்சி அரசியலில் நின்றாலும் அந்த கட்சிக்கு நிதி உதவி செய்யக்கூடியவர் முகந்த்  போத்ரா. அதனால் அவரிடம் ஒருமுறை பணம் வாங்கி விட்டு திரும்ப கொடுக்கவில்லை என்றால் நமது சொத்துக்களை எல்லாம் அவர் பிடுங்கிவிடக் கூடியவர்.

வீட்டை இழக்கும் தனுஷ் குடும்பம்..? யார் இந்த பெரிய போத்ரா.. தலை மறைவான சின்ன போத்ரா..!

அதிகபட்சம் சினிமா பரபலங்கள் என்றாலே உடனே அவர் கடன் கொடுத்து விடுவார். ஆனால் கடன் கொடுக்கும் பொழுது அவர்களிடம் நிறைய வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் கடனை கொடுப்பார். அந்த அளவிற்கு இங்கு பெரிதாக ஆதிக்கம் செலுத்தி வரும் நபராக முகுந்த் போத்ரா இருந்து வருகிறார்.

அவர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவிற்கு கடன் கொடுத்திருந்தார் அந்த கடனை அவர் திரும்பி தரவில்லை என்று அதை ரஜினியிடம் கேட்டு 10 வருடம் முன்பு அவர் வழக்கு போட்டிருந்தார். இந்த மாதிரியான நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்று கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன்.

இதன் காரணமாக தற்சமயம் தனுஷ் கட்டி இருக்கும் வீடு முகுந்த் போத்ராவிடம் கடன் வாங்கி கட்டப்பட்டிருந்தால் கண்டிப்பாக அது பறிபோக வாய்ப்பு இருக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.