அட Play Boy மவனே..! மார்க் ஆண்டனி படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்..! – இது தான் காரணமாம்..!

நடிகர் விஷால் எஸ் ஜே சூர்யா நடிகர் சுனில் உள்ள பிரபலங்கள் நடித்திருக்க கூடிய மார்க் ஆண்டனி திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த படத்தில் ரிலீசுக்கு தடை விதித்து பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. பேண்டஸி திரில்லர் படமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

கதைப்படி, ஒரு தொலைபேசியில் பேசும்பொழுது அது நிகழ்காலத்தில் இல்லாமல் கடந்த காலத்தில் இருக்கக்கூடிய தொலைபேசிக்கு அழைப்பு விடுகிறது.

அங்கே இருக்கக்கூடிய நபர்களே பேசவும் செய்கிறார்கள். இதன் மூலம் வரக்கூடிய பிரச்சினைகள் அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதையாக இருக்கும் என டிரைலரை பார்த்து கணிக்க முடிகிறது.

ஆனால் உண்மையான கதை என்பது கதை என்ன..? என்பது படம் வெளியானால்தான் தெரியும். இந்த படத்தில் பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ரெட்ரோ கெட்டப்பில் இருக்கக்கூடிய நடிகர்களை இந்த காலத்தில் பார்ப்பதற்கு மிகவும் புதுவிதமாக இருக்கிறது.

இதுவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மட்டுமில்லாமல் ஒரு காட்சியில் நடிகர் விஷால் தன்னுடைய தந்தைக்கு போன் செய்கிறார். ஆனால் கடந்த காலத்தில் இருக்கக்கூடிய தந்தை தான் அந்த போனை எடுத்து பேசுகிறார்.

அப்பா நான் உன்னுடைய புள்ள பேசுறேன் என்று விஷால் கூற, ரேவதி புள்ளையா..? வசந்தி புள்ளையா..? கவுசல்யா புள்ளையா..? யார்ரா நீ என்று கேட்கிறார்.

இதனை கேட்க நிகழ்காலத்தில் இருக்கும் நடிகர் விஷால் அட பிளேபாய் மவனே.. என்று ஷாக் ஆகிறார்.

இந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவின. மட்டுமில்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்திருக்கிறது. காரணம் லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் 15 கோடி ரூபாய் பணம் தர வேண்டியது இருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கின் அடிப்படையில் இந்த பணத்தை செட்டில் செய்யும் வரை மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு தடை என்ற தகவல் படக்குழுவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …