stop
Crime | குற்றம்

மிரட்டும் தற்கொலைகளை கண்டு மிரளும் மனிதம்.

--- Advertisement ---

suicide

தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன்  தன்னைத்தானே ஒருவர் கொலை செய்து கொள்ளுதல் ஆகும்.அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பொருளாதாரச் சிக்கல்கள்,  கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தம்  தான் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம். ஓவ்வொரு செப்டம்பர் 10-ஆம் நாள் உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளக் கூடியவர்களின் விகிதமானது அதிகரித்து கொண்டே வருகிறது.உலகில் கிட்டத்தட்ட 800000 பேர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலையால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

மேலும் 15-29 வயது உடையவரின் தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக உள்ளது. 78% மான தற்கொலைகள் குறைந்த  நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகிறது. ஏன்  இந்த தற்கொலைகள் நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது பல உண்மைகள் நம்மை யோசிக்க வைக்கிறது.

உலகில் மூன்றில் இரண்டு தற்கொலைகள் வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன . தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இச்சதவீதம் 1.5 மடங்கு அதிகமாகவும் வளர்ந்த நாடுகளில் இச்சதவீதம் உலகில் 3.5 மடங்காகக் காணப்படுகிறது .ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் தற்கொலை மூலமாக நிகழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

தற்கொலைகளைத் தடுக்கும் வழிகள்:

tension

மனச்சோர்வுடன் எல்லாம் முடிந்தது விட்டது என இடிந்து இருக்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தூண்டி உற்சாகப்படுத்தி சாதிக்க உன்னால் முடியும் என வழி நடத்தும் போது நிச்சயமாக அந்த தற்கொலை முடிவுகளிலிருந்து அவர்கள் வெளியே வருவார்கள்.

பதட்டம் மன அழுத்தம் இவற்றுக்கு  தீர்வு அளிக்கும் வகையில் அவற்றைப் பற்றி விரிவான கருத்தரங்கங்கள் திரைப்படம்  மூலம் விளக்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.அதன்மூலம் அவர்கள் தற்கொலை எண்ணத்தை விடலாம்.

stop24\7 தற்கொலை தடுப்பு உதவி எண்களை உருவாக்குதல் மூலம் தற்கொலை செய்து கொள்பவர்கள் அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் போது அவர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை கூறி இயன்ற உதவிகளை செய்வதின் மூலம் தற்கொலையில் குறைக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---