இன்னா தல… க்ரைம் ரேட்டு கூடினே போவுது.. – மூடே இல்லைங்க.. புது சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்..!

இசை வெளியீட்டு விழாவில் கதை நல்லா இருந்தால் தூங்கிடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என்றும் படம் நல்லா இல்லை என்றால் ரிலீஸ் பண்ண மாட்டேன் என பேசியது சர்ச்சையை கிளப்பியது.கோடம்பாக்கத்தில் இருக்கும் சினிமா இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஸ்வினின் இந்த பேச்சால் கடுப்பாகி உள்ளனர்.

இந்த எதிர்ப்பின் காரணமாக டிசம்பர் 24-ந் தேதி ரிலீசாக இருந்த என்ன சொல்ல போகிறாய் படத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்தனர்.இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக இப்படி இயக்குநர்களின் உழைப்பை இழிவாக பேசுகிறாரே அஸ்வின் என்றும் பெரிய பெரிய நடிகர்களே இன்னமும் இயக்குநர்களை பழித்து பேசாத நிலையில், அஸ்வின் இப்படி பேசியதை கண்டித்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், கதை சொல்ல வந்த இயக்குனரை அஸ்வின் காக்க வைத்தது தெரியவந்துள்ளது. அதன்படி, இயக்குனர் ஒருவர் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கதை சொல்ல, அவர்களோ அஸ்வினை ஹீரோவாக பரிந்துரைத்து, அவரிடம் கதை சொல்லுங்கள் என்றார்களாம்.

இந்த விஷயத்தை அவர்கள் அஸ்வினிடம் சொன்னபோது, சென்னையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில், அதுவும் குறிப்பிட்ட எண் கொண்ட அறையில் தான் கதை கேட்பேன் என்று சொன்னாராம். தயாரிப்பு தரப்பு அந்த ரூமை புக் செய்து, இயக்குனரை கதை சொல்ல அனுப்பியுள்ளனர்.

ஆனால் அஸ்வின் நீண்ட நேரமாக வரவில்லையாம்.இதையடுத்து அந்த இயக்குனர் அஸ்வினை தொடர்புகொண்டு பேசியபோது, எனக்கு இப்போ கதை கேட்கும் மூடே இல்லை. நாளைக்கு வந்து சொல்லுங்க என சொல்லிவிட்டாராம். இதை அந்த இயக்குனர் தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் அந்த ஆளே நமக்கு வேண்டாம் எனக்கூறி விட்டாராம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …