குக் வித் கோமாளி மற்றும் இன்னும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர்கள் புகழ் மற்றும் பாலா ஆகிய இருவரும்.
கையில் கொஞ்சம் காசு சேர்ந்து விட்டால் உடனே கார் வாங்குவது என்பது சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரை பிரபலங்கள் என ஒரு பொதுவான விஷயம்.
அந்த வகையில், சமீபத்தில் குக் வித் கோமாளி புகழ் கார் ஒன்றை வாங்கி இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆனால் மறுபக்கம் அதே நிகழ்ச்சியில் பிரபலமான பாலா என்பவர் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத பகுதிகளை தேர்வு செய்து அந்த பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் இன்னும் பிற உபகரணங்களை வாங்கி கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.
இப்பொழுது இருவரையும் ஒப்பிட்டு இருவருடைய செயல்பாடுகளையும் ஒப்பிட்டு இணையத்தில் தகவல் பரவி வருகின்றது. அதாவது இருவருமே வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படாத பாடுபட்டு பல அவமானங்களை தாண்டி கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றார்கள்.
ஆனால், இன்று பணம் வந்த பிறகு, புகழ் நாம் எங்கே இருந்து வந்தோம் என்பதை மறந்து தன்னுடைய சுகத்திற்காக கார் வாங்கி மகிழ்கிறார்.
மேலும், மற்றொருவர் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை தெரிந்து நாம் இருந்த நிலைமையில் தான் இப்போது அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து யார் என்றே தெரியாதவர்கள் பொதுமக்களுக்காக நன்மை செய்து வருகிறார். பாலாவின் இந்த செயல் பாராட்டத்தக்கது என பதிவு செய்திருக்கின்றனர்.
இப்படியான நபர்களை பாராட்டும் பொழுது தான் அடுத்தடுத்த நடிகர்களுக்கும் இப்படி ஒரு யோசனையாவது தோன்றும் அந்த யோசனை பல பேருக்கு நன்மை பயக்கும் என பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.