நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

“ஹே சினாமிகா” திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு  இயக்குனராக அறிமுகம் செய்து கொண்டார் நடன இயக்குனர் பிருந்தா கோபால்.  இந்தப்படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் மக்களிடையே மிகுந்த நல்ல வரவேற்பைப் பெற்று  வெற்றியடைந்தது.

 இதை அடுத்து இவர் மற்றொரு படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். இந்த படமானது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால் இந்த படத்திற்கான பெயரில் அது பிரதிபலித்துள்ளது.

 மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என தெரிகிறது. இந்த படத்துக்கான பெயர் “குமரி மாவட்டத்தின் தக்ஸ்”  என்பதாகும்.இந்த படத்தின் பெயரே  வித்தியாசமாகவும் மிக நீண்ட பெயராக உள்ளது.

இந்த படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், ஹிரிது ஹருண், அனஸ்வரராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான இசையை சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும் மிக சிறந்த முறையில் பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி அழகாக  படத்தொகுப்பு செய்துள்ளார்.

 இந்த படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்து  இருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற தருவாயில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

வரும் நவம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் இந்தப் படத்திற்கான டீசர் வெளிவரும் என தெரிகிறது.

தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனரின் இந்த வித்தியாசமான படம்  எப்போது திரைக்கு வரும் என்று குமரி மாவட்டத்து மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மக்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …