மாடர்ன் உடையில்.. சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டிய திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கொள்ளை அழகுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தமிழில் பிரபல தொகுப்பாளியாக வலம் வரும் திவ்யதர்ஷினி, காபி வித் டிடி மூலம் பிரபலமானவர். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் திவ்யதர்ஷினி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இவரது நிகழ்ச்சிகள் பெரும்பாலும் TRP-யின் டாப்பில் இருந்தவையாகும். தனது கலகலப்பான பேச்சும் நக்கலான சிரிப்பும் ரசிகர்களை சுண்டி இழுக்க ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் கொண்டவர்.

இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றன.

இவர், தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

சில வருடமாக திவ்யதர்ஷினி பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை, தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி காத்திருக்கிறார்.

ஒரு சில படவிழாக்களை மட்டும் தொகுத்து வழக்கும், திவ்யதர்ஷினி சமீபத்தில் ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக ராஜமௌலி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இணையத்தில், சினிமா நடிகைகளையே பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு டிடி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

சமீபகாலமாக திவ்யதர்ஷினி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியூர் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டு சென்றுள்ள தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மார்டன் லுக்கில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …