இந்த நேரத்துல இப்படியா நடக்கணும்.. திவ்யதர்ஷினி-யை பார்த்து கவலையில் ஆழ்ந்த ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காபி வித் காதல் திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி.

தனக்கே உரிய காமெடி மற்றும் காதல் ஜானரில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகம் முழுதும் ரிலீஸ் செய்ய இருக்கிறது. அக்டோபர் 7ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கோட்சூட் சகிதமாக வந்திருந்தனர். அதேபோல நடிகைகள் அனைவரும் சிகப்பு நிற உடையில் கலந்து கொண்டனர்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி டிடியும் கலந்துகொண்டார். அவரது காலில் பிரச்சனை இருப்பதால் அவரை வீல் சேரில் வைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வந்தனர்.

வீல் சேரில் அமர்ந்திருந்த திவ்யதர்ஷினி ஒருவர் பின்புறம் இருந்து தள்ளிக் கொண்டு வந்தார் என்னை பார்த்த ரசிகர்கள் DD-க்கு என்ன ஆச்சு என்று ஒரு நிமிஷம் அதிர்ந்துதான் போனார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அதன்பிறகு விரைவில் இந்த கால் சம்பந்தப்பட்ட பிரச்சினை அவருக்கு சரியாகி விடும் என்பதை அறிந்து ஆசுவாசம் அடைந்தனர். இந்த படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் DD இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் போதுதான் இப்படி நடக்க வேண்டுமா..? என்று திவ்யதர்ஷினி பார்த்த ரசிகர்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …