உனக்கு புரியுதா..? இல்ல, புரியாத மாதிரி நடிக்கிறியா..? – நேரலையில் தீபக்-ஐ விளாசிய திவ்யதர்ஷினி..!

விஜய் தொலைகாட்சியில் தொகுப்பாளர்களாக பிரபலமானவர்கள் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் தொகுப்பாளர் தீபக். இருவரும் இணைந்து பல்வேறு ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.

நெருங்கிய நண்பர்களான இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபக்கிடம் DD-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ப்ராங்க் செய்யுங்கள் என்று கேட்கப்பட்டது.

இதனை கேட்டதும், முடியவே முடியாது..DD-யை ப்ராங்க் செய்தால் உடனே கண்டு பிடித்து விடுவாள் என்று மறுத்தார்.

தொடர்ந்து, DD-க்கு போன் செய்து தான் ஈரோட்டில் ஒரு ஃபேன்சி ஸ்டோர் வைத்திருப்பதாகவும் அதற்குண்டான விளம்பரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று பேசினார் தீபக்.

இதனை கேட்ட DD என்ன விளம்பரம், என்ன கான்செப்ட், யாரு டைரக்ர் பண்றாங்க என்று DD கேள்வி எழுப்பினார். இப்படி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க, கடுப்பான DD இயக்குனரிடம் என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள் என்று போனை கட் செய்து விட்டார்.

மீண்டும் DD-க்கு போன் செய்து, இயக்குனரிடம் என்னவென்று சொல்லி உங்களை தொடர்பு கொள்ள சொல்வது..? என்று கேட்க உச்ச கட்ட கடுப்பான DD, உங்களுக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா..? டைரக்டர்-கிட்ட சொல்லி எனக்கு வாட்சப் பண்ண சொல்லுங்க என்று கோபமாக பேசினார்.

மீண்டும் மீண்டும் வழ வழவென பேசிக்கொண்டே இருக்க விரக்தியான DD உங்களுக்கு புரியலையா..? இல்ல, புரியாத மாதிரி நடிக்கிறீங்களா..? என்று கோபமாக கத்தினார். அதன் பிறகு, ஹே நான் தான் தீபக் பேசுறேன் என்றதும் கடுப்பாக திட்டி விட்டு போனை கட் செய்தார்.

அதன் பிறகு தன்னுடைய எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு DD-யை கூல் செய்தார் தீபக்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …