ஆண் நண்பருடன் நெருக்கமாக “தெய்வமகள்” சீரியல் வில்லி வினோதினி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபா தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் மிகவும் பிரபலமான தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சுகாசினி.

இவரை வினோதினி என்று கூறினால் தான் பலருக்கும் அடையாளம் தெரியும் ஏனென்றால் தெய்வமகள் சீரியலில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் வினோதினி.

இதனால் வினோதினி என்ற பெயரிலேயே ரசிகர்கள் மத்தியில் ஆழப்பதிந்து விட்டார். பாடகியான இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் முயற்சி செய்து பார்ப்போமே என்று நடிக்கத் தொடங்கிய அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இவர் சீரியலில் நடித்து வருகின்றார். பல வருடங்களாக சீரியல்களில் நடித்து இருந்தாலும் தெய்வமகள் சீரியல் தான் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

சென்னையில் பிறந்த இவர் விகடன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “தென்றல்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு பல சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பைரவி, பொன்னூஞ்சல், தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இது தவிர, தம்பிக்கு இந்த ஊரு, நிமிர்ந்துநில் உள்ளிட்ட சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …