கானா பாடல்கள் என்றாலே தேவாவை யாராலும் அசைத்துக் கொள்ள முடியாது என்று கூறும் அளவிற்கு கிராமிய கானா பாடல்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் தேவா [Deva]. பல திரைப்படங்களுக்கு அற்புதமான முறையில் இசை அமைத்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர்.
மேலும் இன்றைய இரு இன்று இருக்கக்கூடிய இடம் தலைமுறையும் இவரது கானா பாடல்களை விரும்பி கேட்கக் கூடிய அளவிற்கு அதில் கூறப்பட்டிருக்கக் கூடிய கருத்துக்கள் முக்காலம் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது என்பது எதார்த்தமான விஷயம் தான்.
மேலும் நாட்டுப்புற பாடல்களை சினிமாவில் கொடுத்து மிகப்பெரிய ஹிட்களை அள்ளிய தேவாவின் உண்மையான பெயர் வேறு. எனினும் சினிமாவிற்காக இவர் நியூமராலஜியை பயன்படுத்தி பெயர் வைப்பதில் பலவிதமான சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்.
அந்த வகையில் முதலில் இவர் மனோரஞ்சன் என்ற பெயரை தேர்வு செய்து இருக்கிறார். அந்தப் பெயர் அவ்ளவாக இவருக்கு செட்டாகவில்லை என்று தான் கூற வேண்டும். இதனை அடுத்து இவர் நாடோடி சித்தன் என்ற பெயரில் அறிமுகமானார்.
மேலும் நாடோடி சித்தன் என்ற பெயரில் ஒரு படத்தில் இவர் இசையமைக்க அந்த படம் அவ்வளவு சரியாக செல்லாத காரணத்தினால் இவருக்கு இந்த பெயர் ராசியான பெயராக தெரியவில்லை.
அந்த வகையில் இவர் மற்றொரு படத்திற்கு தேவா பிரதர்ஸ் என்ற பெயரில் இசையமைத்தார். அந்தப் பெயரும் இவருக்கு சரியாக அமையாததின் காரணத்தால் நான்கு ஆண்டுகள் பெயருக்காக போராடிய இவர் நடிகர் ராமராஜ் படத்திற்கு இசையமைக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அப்போது இவர் தனது பெயரை சி தேவா என்ற பெயரில் இசையமைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் நடிகர் ராமராஜர் சி தேவா என்பதை விட வெறும் தேவா என்ற பெயர் இன்னும் சிறப்பாக உள்ளது. எனவே அந்த பெயரையே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து தனது பெயரை தேவா என்று மாற்றி திரையுலகில் இவர் பல சாதனைகளை செய்திருக்கிறார் மேலும் இந்தப் பெயர் இவருக்கு ராசியான பெயராகவும் ஒரு நல்ல அடையாளத்தை தந்த பெயராகவும் மாறிவிட்டது.
எனவே நான்கு ஆண்டுகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை நடிகர் ராமராஜன் சாரும் என்பது இதன் மூலம் தெரிந்து விட்டது.