அக்கா கணவர் ராஜகுமாரனிடம் 20 ஆண்டுகளாக பேசாமல் இருக்கும் நகுல்..! – இது தான் காரணமா..?

 அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை படத்தின் மூலம் தேவயானிக்கு திரையுலகில்  அசைக்க முடியாத ஓர் இடம் கிடைத்தது அதற்கு முன் பல வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது வேடம் மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தது மிகச்சிறந்த கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

 அதன் பின்னர் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் குறிப்பாக விஜய்யோடு நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜகுமாரன் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

 அப்போதுதான் தேவயானிக்கும் ராஜ்குமாருக்கும் இடையே  காதல் மலர்ந்தது இவர்களின் காதலை இரண்டு வீட்டாரும்  புறக்கணித்ததன் காரணமாக இவர்கள் பதிவு திருமணத்தை செய்து கொண்டார்கள் இந்த திருமணத்தை செய்வதற்கு தேவையான வீட்டில் சுவரைத் தாண்டி ஓடி வந்ததாக பல செய்திகள் பரவி வந்தது.

 தற்போது தேவயானிக்கு திருமணமாகி இருபத்தியோரு ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும்  தனது தம்பியான நாக்கு… மூக்கு … பாடலில்  தனது நடனத்தால்  மக்களைக் கவர்ந்த நடிகர் நகுல் தனது அக்காவிடம் இதுவரை பேசவில்லையாம். இதற்கு காரணம் தனது அக்கா  வீட்டுக்கு எதிராக செய்து கொண்ட காதல் திருமணம்  மட்டுமல்லாமல் வேறு ஒரு காரணம் இருப்பதாக இவரது கணவர் கூறியுள்ளார்.

 இந்தக் காரணம் என்னவென்றால் தாங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது நடிகர் நகுல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார். அதுவும் ரஜினிகாந்த் நடத்துகின்ற பள்ளியில் படித்து வந்ததால் ரஜினியின் மகள்கள் இதை நகுல் முன்னால் உங்க அக்கா ஓடி போய் கல்யாணம் பண்ணி டாங்களா? என கிண்டலாக கூறியிருப்பார்கள்.

இதனால் நகுலுக்கு ஏற்பட்ட அவமானம் இன்னும் அவருக்குள் இருக்கும் போல எனவே தான் இதுவரை என்னோடும்  என் மனைவி தேவயானியிடமும் அவர் பேச விரும்பவில்லை என்ற ஒரு மிகப்பெரிய  குண்டைத் தூக்கிப் போட்டார்.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் நகுல் இருபத்தியோரு ஆண்டுகளாக தன் அக்காவோடு பேசாத இவருக்குள்  இப்படி ஒரு சோகம் இருக்கிறதா என்று ரசிகர்கள் பேசுகிறார்கள்.