இப்படியெல்லாம் நடக்கும்ன்னு கனவுல கூட எதிர்பார்க்கல.. – நடிகர் தனுஷ் ஹேப்பியோ ஹேப்பி…!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நடிகர் தனுஷ் நிகழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும், இயக்குனர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அன்றைய காலகட்டத்தில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார் என்று பலரும் கேலி பேசினார்கள். ஆனால் அப்படிப் பேசியவர்கள் யாருக்கும் தெரியாது இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தவிர்க்க முடியாத நடிகராக வருவார் என்று.

கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்று வென்றுள்ளார் நடிகர். நடிகர் தனுஷ் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார் தற்போதும் திரையுலகினர் யாராவது விவாகரத்து செய்துவிட்டால் முதலில் தனுஷ் பக்கம் தான் பழைய திருப்புவார்கள் அந்த அளவுக்கு இவர் மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன.

இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பதன் மூலம் தன்னுடைய பிம்பத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். ஒரு காலத்தில் இவன் எல்லாம் நடிக்க வந்துட்டான்.. ஆளும்.. உடம்பும்.. என்று பேசியவர்கள் இப்போது என்னமா நடிக்கிறான்யா..? என்ற அளவுக்கு பேசுகிறார்கள்.

இந்நிலையில் தன்னுடைய இருபது ஆண்டுகால திரைப் பயணத்தை குறித்து நெகிழ்ச்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ். அதில் இது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது.

இதற்காக என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் தன்னை இயக்கிய இயக்குனர்கள் என் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் என்னுடைய ஆஸ்தான குருவும் என்னுடைய அண்ணனும் ஆகிய செல்வராகவனுக்கும் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய என்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா அவர்களுக்கும் என்னுடைய வாழ்நாள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எண்ணம் போல் வாழ்க்கை அன்பை பரப்புங்கள் ஓம் நமசிவாய என்று தன்னுடைய அறிக்கையில் மனம் நெகிழ்ந்து உள்ளார் நடிகர் தனுஷ். தொடர்ந்து சினிமா செய்திகள் பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

இதையும் படிங்க : பட வாய்ப்புக்காக எந்த லெவலுக்கும் இறங்க தயார்..! – சதாவின் பிரமாஸ்திரம்..!

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …