இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ்.

சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மாளவிகா மோகன், சிவராஜ்குமார் நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக வன்முறை படமாக கூறப்பட்டாலும், வசூல் குவித்தது.

தனுஷ்

இந்த படத்தை தொடர்ந்து, தனது 50வது படமாக ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ். இதில் அவரது குருநாதரும், இயக்குநரும், சொந்த அண்ணன் செல்வராகவன் நடிக்கிறார்.

சமீபத்தில், இப்படி நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று ராயன் படத்தில் செல்வராகவன் நடிப்பது குறித்து பதிவு வெளியிட்ட தனுஷ், நன்றி சார் என, செல்வராகவனுக்கு டிவீட் செய்திருந்தார்.

டைரக்டர் சார்

அதற்கு பதிலளித்த இயக்குநர் செல்வராகவன், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி டைரக்டர் சார் என, பதில் பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த படத்தை நான் இயக்கவில்லை. இது தனுஷின் சொந்த கதையில், சொந்த முயற்சியில் உருவாகும் அவரது கனவு படம். இதில் நான் ஒரு நடிகனாக மட்டுமே என் பங்களிப்பை செய்கிறேன் எனவும், செல்வராகவன் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள்: ஜோதிகா பண்றது தான் கரெக்ட்டு.. சிவகுமாரின் செயலை கண்டு காறி துப்பும் நெட்டிசன்கள்.. என்ன ஆச்சு..?

இந்நிலையில் தனது 50வது படம் தவிர்த்து வேறு ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். சேகர் கம்முலா என்ற தெலுங்கு இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் இந்த படம் தயாராகிறது.

திருப்பதியில் படப்பிடிப்பு

இந்த படத்தில் நடிகர் நாகார்ஜூனா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் ஐதராபாத்தில் துவங்கியது. பின்னர் ஆந்திராவில், திருப்பதியில் மலை அடிவாரத்தில் நடந்தது.

கடந்த வாரத்தில் நடந்த ஷூட்டிங்கின் போது, படப்பிடிப்புக்குழு சார்ந்த ஜிம் பாய்ஸ், போக்குவரத்தை மாற்றி விட்டதால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அனுமதி ரத்து

இதையடுத்து போலீசாருக்கு பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்ததால், அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த போலீசார் தந்த அனுமதியை ரத்து செய்துவிட்டனர். இதையடுத்து அங்கு தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியவில்லை.

தனுஷ், ராஷ்மிகா

இந்நிலையில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா ஒன்றாக காணப்படும் ஒரு சில விநாடிகள் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏதோ ஒரு இடத்தில் வீட்டின் முன் சைக்கிள் அருகே நின்றுக்கொண்டு இருக்கும் தனுஷை, வெள்ளை நிற சுடிதார் அணிந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா கையை பிடித்து இழுத்து அழைத்துச் செல்கிறார்.

இதையும் படியுங்கள்: சீரியலில் இழுத்து போத்திகிட்டு நடிக்கும் நடிகை வித்யா வினு மோகனா இது.. இன்னைக்கு தூங்குன மாதிரி தான்..

இதை யாரோ ஜன்னல் வழியாக செல்போனில் படம் பிடித்து, அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். அந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது.