இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்து மிரட்டும் மற்றொரு திரைப்படம் விரைவில் – நானே வருவேன்!

கோலிவுட் பிரபலமான செல்வராகவன் தன்னுடைய தம்பியான தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்தி புதுப்பேட்டை படத்தின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இவரைச் சாரும். இதன்மூலம் தனுஷின் திரை உலக வாழ்வில் ஒரு மிகப் பெரிய ஏற்றம் ஏற்பட்டு இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்.

 தனுஷின் மணவாழ்க்கையில் முடிந்ததற்கு பிறகு அவருக்கு நிறைய சறுக்கல்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல திரையுலகிலும் ஏற்பட்டது அறியக் கூடிய விதத்தில் தற்போது அவரது திருச்சிற்றம்பலம் படம் மிகவும் பிரம்மாண்ட முறையில் வெற்றியடைந்து வசூலை வாரி குவித்து மீண்டும் அவருக்கு ஒரு வாழ்க்கையை தந்துள்ளது.

 இதனை அடுத்து இவர் சொந்த அண்ணனான செல்வராகவனுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் இவர்கள் செய்வதாக உள்ளது அந்த படத்தின் பெயர் தான் நானே வருவேன் என்ற படத்திற்கான இசை யுவன்சங்கர்ராஜா  அமைக்கிறார்.

 இந்த படத்தின் கதையானது தனுஷுக்காக உருவாக்கப்பட்டது என்று செல்வராகவன் கூறியிருக்கிறார் இதையடுத்து கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படம் நானே வருவேன்  பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது இந்த படத்தில் அண்ணன் தம்பி என்ற இரட்டை வேடத்தில் நடிப்பார்.

மேலும் இரண்டு கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிப்பார்கள். பீஸ்ட் சாணிகாகிதம்  படங்களை தொடர்ந்து செல்வராகவன் நடித்த பகாசுரன் படமும் வெளிவர கூடிய சூழ்நிலையில் செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய சீனில் நடிப்பதாக உள்ளது.

 அண்ணன் தம்பி இணைந்து மிரட்டும் இந்த நடிப்பை காண்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். எனவே செல்வராகவன் எடுத்த புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் படங்களில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கும் இவர் எந்த நானே வருவேன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அதிகாரப்பூர்வமான தகவல் இவரிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

நானே வருவேன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை திரைப்படக் குழு வெளியிட்டிருக்கிறது இதில் வரும் 15ஆம் தேதி டீசர் வெளிவரும் என தெரிகிறது இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …