பிரபல இளம் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை தர்ஷா குப்தா..! – யாருன்னு பாருங்க..!

 காதல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் பரத் இவர் மலையாளத்தில் லட்சாவதியே என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமான இதில் இவர் நடனம் ஆடிய விதத்தை பிரபுதேவாவுக்கு இணையாகவும் போட்டியாகவும் அப்போதே பேசி வந்தார்கள்.

 இதனையடுத்து சில திரைப்படங்களில் நடித்தவர் தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இவர் ஒரு தமிழ் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளது.

 இதனையடுத்து இந்த படத்திற்கு இவருக்கு ஜோடியாக பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்த  தர்ஷா குப்தா நடிக்கிறார். இது உண்மை என்று எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவராத நிலையில்

பரத்தின் ரசிகர்கள் தங்களது பேன் பேஜில் பரத் மற்றும் தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை இணைத்து நியூ ஜோடி கம்மிங் சூன் என பதிவிட்டுள்ளது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும்  இந்த பதிவை தர்ஷா குப்தா ஷேர் செய்து பரத்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தையும் டைம்லைனில்  வெளியிட்டிருப்பது  இருவரும் அந்தப் படத்தில் நடிப்பதை உறுதி செய்வது போல உள்ளது.

இதுவரை சின்னத்திரையில் சின்ன படத்தில் மட்டுமே நடித்து வந்திருந்த தஷ்தா குப்தாவுக்கு தற்போது இந்த பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவர் மென்மேலும் வெள்ளித்திரையில் பல படங்கள் பண்ண வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள். இவரது நடிப்பை பார்ப்பதற்கு இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கிறார்கள்

 இதனை தொடர்ந்து தர்ஷா குப்தாவின் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இருவரையும் அந்த படத்தில் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும், அவர்கள் நடிப்பில் மிக விரைவில் அந்தப் படம் வெளிவர வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாக ரசிகர்கள்  தெரிவித்திருக்கிறார்கள்.

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு நோக்கி போகும் தர்ஷா குப்தா அங்கு ஜொலிப்பார் இல்லையா என்பது படம் பார்த்த பிறகு எல்லோரும் சொல்வார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …