இதுவரை நீங்கள் பார்க்காத கெட்டப்பில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் விரைவில் படப்பிடிப்பு!

1930 மற்றும் 1940 வரை உள்ள கால கட்டங்களை மையமாகக் கொண்டு மிக பிரம்மாண்ட முறையில் உருவாக்கப்படக்கூடிய  கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே ராக்கி, சாணி காகிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் என்ற படத்தை இயக்குகிறார்.  சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை எடுக்க உள்ளார்கள். இப்படத்திற்கு இசையை தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 மேலும் இந்த படத்தில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவார்.மேலும் த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்கள்.

சண்டை மாஸ்டர் திலீப் சுப்பராயன் செய்ய படத்திற்கான வசனத்தை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்றும்  முதல் கட்டமாக தென்காசியில் இதன் படப்பிடிப்பு நிகழும் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை காண கால அளவு 120 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் இதுவரை காணாத தனுசை ஒரு புதிய  லுக்கில் இந்த படத்தில் காணலாம். நீண்ட தாடி மற்றும் முடியுடன் காட்சிகளுக்கும் தனுஷின் இந்த காட்சியானது அவர் பிறந்த நாளன்று முதல் சிறப்பு போஸ்டரில் வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

---- Advertisement ----

விவாகரத்துக்குப் பிறகு ஏற்பட்ட தடைகளை தகர்த்து தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் தனுஷின் இந்த கேப்டன் மில்லர் படம் எப்படியும் வெற்றி பெறும். அதுவும் ஒரு பின் நோக்கிய காலத்தைக் அடிப்படையாக கொண்ட கதை அம்சத்தை உடைய படம் என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

 மேலும் வித்தியாசமான வேஷத்தில் ரசிகர்களின் நெஞ்சை கவரும் வகையில் இவரது நடிப்பு நிச்சயம் இருக்கும் என்று நாம் கூறலாம்.

---- Advertisement ----