திவ்யதர்ஷினி ஆகிய நான்.. இப்படி தான் DD-யாக மாறினேன்..! – போட்டு உடைத்த DD..!

 டிடி என்றாலே அனைவருக்கும் தெரியும் இவரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என்ற வகையில் தொகுப்பாளினி என்ற அந்தஸ்தில்  இவர் அடைந்த புகழுக்கு எல்லையே இல்லை என்று கூறும் அளவுக்கு இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

 ஆரம்ப நாட்களில் காபி வித் டிடி என்ற ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர் அதன்பிறகு வந்த நிகழ்ச்சிகள் முழுமையும் தொகுத்து வழங்க கூடிய ஒரு முழுநேர தொகுப்பாளினியாக விஜய் டிவியில் வலம்வந்தார். விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு விஜய் டிவியில் கொடிகட்டி கோலோச்சிய தொகுப்பாளினி   திவ்யதர்ஷினி.

இவர் பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப்போட்டி மற்ற போட்டிகளில் ஈடுபடக்கூடிய இவர் பேசாமலேயே இருந்நது இல்லையாம்.  தனது பெயரை பள்ளியிலேயே முழுமையாக எழுத சங்கடப்பட்டு டிடி என்று சுருக்கி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் சக மாணவர்களும் அவ்வாறே இவரை அழைத்து உள்ளார்கள்.

 இந்நிலையில் இவர் தற்போது அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் இருப்பதற்கு காரணம் சமீபத்தில் இவர் காலில் அடிபட்டு விட்டதால் நீண்ட நேரம் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க முடியவில்லை. எனவே குறிப்பிட்ட முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் இவர்  வழங்குகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் தொகுத்து வழங்கிய நயன்தாராவை இன்டர்வியூ மற்றும் ஆர்.ஆர்.ஆர் பட ப்ரோமாஷனுக்காக ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை இன்டர்வியூ செய்த விதத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

குழந்தைகள் முதல் டிடி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட டிடியை விஜய் டிவியில் உள்ள மற்ற தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவராக கருதக்கூடிய  தீபக் தான் முதன்முதலில் டிடி என்று அழைத்தாராம் அன்றிலிருந்து இன்றுவரை விஜய் டிவியில் டிடி என்ற பெயர் அப்படியே நிலைத்துவிட்டது  என்று கூறினார்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஏன் திவ்யதர்ஷினியை  நாம் டிடி என்று அன்போடு அழைக்கிறோம் என்று.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …