திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி வீட்டிலேயே செய்யலாம்

நீங்கள் பிரியாணி பிரியரா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணியை விரும்பி சாப்பிடுபவரா? உங்களுக்கு இந்த பிரியாணியை வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் உங்களுக்காக இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணியை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறையைப் படித்து தெரிந்து கொண்டு இந்த வார விடுமுறை நாட்களில் முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சீரக சம்பா அரிசி – 1 1/2 கப்;
சுடுநீர் – 2 1/2-3 கப்
* சிக்கன் – 500அ600 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 6
* சின்ன வெங்காயம் – 20
* பிரியாணி மசாலா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் (இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
* நெய் + எண்ணெய் – 3 + 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் – 1/3 கப்
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
* சுடுநீர் – 1/4 கப்
* புதினா மற்றும் கொத்தமல்லி – தலா 1/3 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

பிரியாணி மசாலா பவுடர் அரைப்பதற்கு:

* மல்லி – 2 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் – 5
* கிராம்பு – 5
* பட்டை – 1 1/2 இன்ச்
* முந்திரி – 5
* ஜாதிக்காய் – 1/8 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ – 1
* கல்பாசி – 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை – 2 சிறியது

செய்முறை:

* முதலில் பிரியாணி மசாலா பொடி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி குறைவான தீயில் சூடேற்ற வேண்டும்.

* அதே வேளையில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் சின்ன வெங்காத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு 12-15 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதன் பின் அரைத்த பிரியாணி மசாலா பொடியை சேர்த்து வதக்கி, மிகவும் வறண்டு போனால், ஒரு டேபிள் ஸ்பூன் நீர் ஊற்றி கிளறி, ஒரு நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* அதன் பிறகு அதில் சிக்கனை கழுவிப் போட்டு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் சிக்கன் நிறம் மாறும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு 1/4 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, 15 நிமிடம் மூடி வைத்து, அவ்வப்போது கிளறிவிட்டு, சிக்கனை வேக வைக்க வேண்டும்.* பின்னர் சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வாணலியில் உள்ள கிரேவி எவ்வளவு உள்ளது என்று அளந்து பார்த்துக் கொள்ளுங்கள். இது சுமார் 1/2 கப் வரை இருக்க வேண்டும்.

* 1 1/2 கப் சீரக சம்பா அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. எனவே பாத்திரத்தில் உள்ள 1/2 கப் கிரேவியுடன் 2 1/2 கப் சுடுநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, 1-2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது உப்பு சுவை பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பின்னர் சீரக சம்பா அரிசியை நன்கு நீரில் கழுவி சேர்த்து, அதோடு 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிளறிவிட்டு மீண்டும் மூடி 6 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். அவ்வப்போது சாதத்தை கிளறி விடுங்கள். இதனால் சாதம் குலைந்துவிடாமல் இருக்கும். 6 நிமிடம் ஆனதும், அந்த வாணலியை அலுமினியத் தாள் கொண்டு சுற்றி, மூடியால் மூடி, அதன் மேல் ஒரு கனமான பொருளை வையுங்கள்.
* அதே வேளையில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தில் வைத்து, குறைவான தீயில் 8-10 நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைக்க வேண்டும்.
* அடுப்பை அணைத்த பின் 10-15 நிமிடம் கழித்து பிரியாணி பாத்திரத்தை திறந்து மெதுவாக கிளறிவிட்டு, மீண்டும் 5-6 நிமிடம் கழித்து திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி தயார்.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …