Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தவறான உறவுக்கு அழைத்த டைரக்டர்.. யாரு தெரியுமா..? ரகசிய ரிப்போர்ட்..!

Tamil Cinema News

தவறான உறவுக்கு அழைத்த டைரக்டர்.. யாரு தெரியுமா..? ரகசிய ரிப்போர்ட்..!

திரை உலகில் பல பெண் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 2006-ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு மிகச்சிறந்த இயக்குனராகவும் திரைப்பட நடிகையாகவும் விளங்குகிறார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.

இதையும் படிங்க: கடைசி வரை வப்பாட்டியாக வாழ்ந்த கே.ஆர்.விஜயாவின் பலரும் அறியாத கண்ணீர் கதை..!


ஆரம்ப காலத்தில் இவர் ஆடை வடிவமைப்பாளராகவும், மேலாளராகவும் பணி புரிந்து இருக்கிறார். இதனை அடுத்து திரைப்படத் துறையில் தடம் பதிப்பதற்கு முன்பே ஓமனில் மஸ்கட் நகரில் இவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி இருக்கிறார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்..

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 2006-ஆம் ஆண்டில் சக்கரமுத்து என்ற மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு கரு பழனியப்பனின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் சினேகாவின் தாயாராக நடித்த அசத்தினார். இது தான் இவரின் முதல் தமிழ் திரைப்படம்.

இதனை அடுத்து பொய் சொல்லப் போகிறோம், எல்லாம் அவன் செயல் ஆகிய திரைப்படங்களில் நடித்த இவர் 2009-ஆம் ஆண்டில் திரு திரு திரு, ஈரம், நாடோடிகள், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், ஆதவன் ஆகிய திரைப்படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்களை செய்து அசத்தினார்.

--Advertisement--


2010-ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா, ஆண்மை தவறேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், கனிமொழி போன்ற படங்களில் நடித்த இவர் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

2011-ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் மகளின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கோபமான தாயாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து விளையாட வா என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

2013-ஆம் ஆண்டில் சுட்ட கதை, விடியும் முன், நெருங்கி வா முத்தமிடாதே போன்ற படங்களில் நடித்த இவர் 2018-ஆம் ஆண்டில் இரவுக்கு ஆயிரம் கண்கள், திமிர் பிடித்தவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தகாத உறவுக்கு அழைத்த டைரக்டர்..

திரைப்படங்களோடு நின்று விடாத இவரது பயணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்துள்ளது. இதனை அடுத்து இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி சுமார் 1500 எபிசோடுகளை தொகுத்து வழங்கிய பெருமை இவருக்கு உள்ளது.


2012-ஆம் ஆண்டில் ஆரோகணம் என்ற படத்தை இயக்கிய இவர் பல பேர் பாராட்டுகளை பெற்றார். இந்த படம் ஏழாவது விஜய் விருதுகள் சிறப்பு விருதை வென்றது. மேலும் நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

இப்படிப்பட்ட இவரை பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்த விசயத்தை வெளிப்படையாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

யார் அவர் தெரியுமா?

இந்நிலையில் அந்த டைரக்டர் மலையாள திரை உலகை சேர்ந்தவர் என்றும், இவர் மலையாள திரைப்படத்தில் நடித்த போது தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.

அட்ஜஸ்ட்மென்ட்க்கு மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அந்த டைரக்டர் பல்வேறு நெருக்கடிகளை நடிக்கக்கூடிய சமயத்தில் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும் அந்த டைரக்டரின் மாயவளையில் சிக்காமல் தைரியமாக தப்பித்து இருக்கக்கூடிய இவர் இந்த விஷயத்தை ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் சொல்லி இருக்கிறார்.


இதையும் படிங்க: நீங்க அதை பாத்தீங்களா..? இதுவரை இல்லாத படு கிளமாரான உடையில் சகுனி பட நடிகை பிரணிதா..!

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சொல்வதெல்லாம் உண்மை தொடரை 1500 எபிசோடுகளுக்கு மேல் இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலையா? என்று வாய் அடைத்துப் போய்விட்டார்கள்.

மேலும் தற்போது இந்த விஷயம் வைரலாக இணையங்களில் பேசப்பட்டு வருவதோடு கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top