மிஷ்கின் ( Mysskin ) : டைனோசர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் சர்ச்சையான சில கருத்துக்களை கூறி மக்கள் முன்பு வெளிப்படையாக பேசினார்.
அதில் அவர் கூறியதாவது, இந்த படத்தை இயக்கிய டைரக்டர் முகத்தை பார்த்த உடனே தெரிகிறது, அவர் ஒரு சிகரெட் விரும்பி என்று அவர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. ஒரு நாளைக்கு எப்படியும் 100 சிகரெட் அடிப்பார் என்று, நல்லது தான் படம் எடுக்கும் போது டென்ஷன் இருந்தால் மட்டும்தான் படத்தை ஒழுங்காக எடுக்க முடியும்.
நானெல்லாம் ஒரு நாளைக்கு 120 சிகரெட் அடிப்பேன் எனது முதல் படமான அஞ்சாதே படத்தில் நிறைய சீன்களில் எனக்கு உடன்பாடு இருக்காது.நிறைய டென்ஷன் ஆவேன் அதனாலேயே சிகரெட் குடித்துக் கொண்டே இருப்பேன், அதுபோல இவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது இந்த படம் நன்றாக இருக்கும் என்று மிஸ்கின் கலகலப்பாக டிரைலர் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறியதாவது என் தம்பி இந்த விழாவிற்கு போனி கபூர் வந்திருக்கிறார் என்று கூறினார் அவர் யாரு என்று கேட்டேன், எனக்கு போனி கபூர்ணா யாருனே தெரியாது எனக்கு ஸ்ரீதேவி மட்டும் தான் தெரியும் ஸ்ரீதேவி தான் உன்னை வாழ வைக்க போகுது அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன். போனி கபூர் பக்கத்துல இருந்தா நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.
போனி கபூர் என்னிடம் சில கேள்விகளை கேட்டார் உங்க ஊர்ல டச் ஆஃப் பாய் எல்லாரும் பேசுவாங்களா என்று கேட்டார். எங்க ஊர்ல அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் எல்லோரும் தான் பேசுவாங்க. அதற்கு நான் சொன்னேன் அப்படி எல்லாம் இல்ல சார் எங்க ஊர்ல எல்லாருக்கும் பேச வாய்ப்பு கொடுப்போம் சார் அதுதான் சார் தமிழ்நாடு.
இப்போ இருக்க டைரக்டர்கள் எல்லாம் காசுக்காக தான் பணம் பண்றாங்க ஆனா எனக்கு தெரிஞ்ச வரை வெற்றிமாறன், பாலா போன்ற இயக்குனர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா எப்பொழுதும் நல்ல நிலையில் இருக்கும் என்று நம்புறேன்.
ரொம்ப நேரமா பேசிட்டேன் எல்லாரும் போய் தூங்குங்க.. தம் அடிங்க, தண்ணி அடிங்க.. இத்தோட நான் கிளம்புறேன் ஆள விடுங்க என்று கலகலப்பாக தன்னுடைய வெளிப்படையான பேச்சை மிஸ்கின் அவர்கள் டைனோசர் திரைப்படத்தில் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.