ஹிந்தியே தெரியாது… என்று ஹிந்தியில் சொல்லி மேடையை சிரிப்பால் அதிரவைத்த இயக்குனர் பார்த்திபன்!

பொன்னியின் செல்வன் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். குறிப்பாக விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் மற்றும்  உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய்  டைரக்டர் மணிரத்னம்  ஏ ஆர் ரகுமான் டைரக்டர் பார்த்திபன் மற்றும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டார்கள்.

 ஒவ்வொருவரும் பேசும்போது அவருக்குரிய பாணியில் பேசி அனைவரையும் கவர்ந்தார்கள். அதுபோல கமலஹாசன் பேசும்போது இந்த படத்தைதான் எம்ஜிஆரிடம் இருந்து பெற்றதாகவும் அதன் பின் அது அவ்வாறு கைமாறி மணி முயற்சியால் இன்று நனவாகி விட்டது என்று மிகவும் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

 மேடையில் பல உண்மைகள், பிளாஷ்பேக் காக  வர ஆரம்பித்தது வந்தியத்தேவன்  பாத்திரத்தை சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஜெயலலிதா பரிந்துரை செய்தாராம். இன்று அந்த வேடத்தில் கார்த்தி நடிப்பது தனக்கு பெருமையாக இருந்ததாக அவர் கூறினார்.

 பார்த்திபனுக்கு இந்த படத்தில்  ஒரு சிறிய வேடம்தான் என்றாலும் அந்த வேடத்தில் நடிப்பதற்கு மனிதரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

 மேலும் இவர் பேசும் போது தனக்கு ஹிந்தி தெரியாது என்று ஹிந்தியிலேயே கூறி அவையில் கலகலப்பை ஏற்படுத்தினார். அவருக்கே உரிய பாணியில் தமிழில் உயிர் தமிழ் ஞானமே என மிக கூலான பாணியில் பேசிய  பேசியதைப் பார்த்து அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். கல்கி கண்ட கனவை நினைவாக்கிய மாபெரும் இயக்குனர், அதுவும் உண்மையான  பான் இந்தியா இயக்குனர் யார் என்றால் அது மணிரத்தினம் மட்டுமே என்று பலர் பாராட்டி பேசினார்கள்.

மொழியே தெரியாமல் மணிரத்தினம் எப்படி ஐஸ்வர்யாராய் இடமிருந்து இப்படிப்பட்ட ஒரு நடிப்பை வரவழைக்க இருப்பார் என்பதை அவர் நடிப்பைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.

 பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்திக், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளுக்கு வெளிவரும் இது நமது தமிழர் வரலாற்றைப் உலகிற்கு பறைசாற்றும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …