இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்து வரும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

தமிழ் சினிமாவில் டான் டென் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய படங்களில் ஒன்றிரண்டு தவிர, மற்ற அனைத்துமே மாஸ் ஹிட் படங்கள்தான்.

ஜென்டில்மேன் இவரது முதல் படம். அடுத்து காதலன், ஜீன்ஸ்,  முதல்வன், இந்தியன், பாய்ஸ், அந்நியன், ஐ,  சிவாஜி, ரோபோ, ரோபோ 2 போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொலலலாம்.

இயக்குநர் ஷங்கர் படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகு, ஹீரோ மாஸ் பலமடங்கு அதிகரிக்கும் என்பதால், அவரது படங்களில் வாய்ப்பு கிடைப்பது லக்கி பிரைஸ்தான். அந்த வகையில் ரஜினி, கமல், அர்ஜூன், பிரபுதேவா, பிரசாந்த், விக்ரம் போன்றவர்களுக்கு, அந்த படங்கள் மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.

இப்போது, தனது 14வது படமாக, கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை, ஷங்கர் இயக்கி வருகிறார்.

இதைத்தொடர்ந்து, ஷங்கரின் 15வது படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில், அஞ்சலி ஆகியோர், முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் வெளியாகிறது.

---- Advertisement ----

அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின், இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது, இந்த படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

ஷங்கர் 15வது படத்தின் பெயர், கேம் சேஞ்சர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

ஜீன்ஸ், பாய்ஸ், ஐ, ரோபோ படங்களை போல, ஆங்கிலத் தலைப்பு வரிசையில்,  ‘கேம் சேஞ்சர்‘ பட தலைப்பாக இருக்கலாம் எனத் தெரிகிறது.  

---- Advertisement ----