“அடியாத்தி வெள்ளை சர்க்கரை சாப்பிடாமல் இருந்தா..!” – இவ்வளவு நன்மையா?

ஆரம்ப நாட்களில் கருப்பட்டி, பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்தி இருந்த நாம் நாகரிகத்தின் மோகத்தால் வெள்ளை சர்க்கரை-க்கு மாறினோம். இதன் விளைவு இன்று பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் என்று கூறும் அளவுக்கு பன்மடங்காக பாதிப்புகள் அதிகரித்து உள்ளது என்று கூறலாம்.

sugar

மனித குலத்திற்கே எண்ணற்ற தீமைகளை செய்கின்ற இந்த வெள்ளை சர்க்கரையால் ஆரோக்கியம் மெல்ல, மெல்ல சிதைந்து வருகிறது.

எனவே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் இந்த வெள்ளை சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளை சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் உங்கள் வீட்டில் வெள்ளை சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தால் உங்கள் தோளில் ஏற்படும் அலர்ஜி நோய் ஏற்படாது. மேலும் சருமங்களில் ஏற்படுகின்ற அரிப்பு குறையும், பாதங்களில் வெடிப்பு ஏற்படாது.

மேலும் உங்களுள் இருக்கக்கூடிய ஆற்றல் பன்மடங்காக அதிகரிக்கும். எதனால் தெரியுமா? நீங்கள் சர்க்கரை இல்லாத உணவை சாப்பிடும் போது ரத்த சக்கரை அளவு உங்களது மெட்டபாலிசத்தை அதிகரிக்க கூடிய தன்மை கொண்டிருக்கும். மேலும்  மெட்டபாலிசம் அதிகரிப்பதால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகமாகிறது.

---- Advertisement ----

sugar

உங்கள் உடல் எடை மிக விரைவில் குறையும். இதற்கு காரணம் நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருப்பது தான்.

சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருப்பதின் மூலம் நீரிழிவு பாதிப்பு, புற்றுநோய், இதய நோய் போன்ற பல்வேறு நோய்களின் தாக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

sugar

மேலும் சர்க்கரையை அதிகளவு எடுத்துக் கொள்வதின் மூலம் வயிற்று வீக்கம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை அதிகரிக்க கூடிய தன்மை  உள்ளது. எனவே கூடுமானவரை நீங்கள் இனிப்பை குறைத்துக் கொண்டாலே வயிற்று பிரச்சனைகளுக்கு விடை கொடுக்கலாம்.

sugar

சர்க்கரைச் சார்ந்த உணவுகளை நீங்கள் உண்ணும் போது இரவில் உறக்கம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படும். எனவே அந்த உணவை தவிர்த்து விட்டு பாருங்கள். உங்கள் மனநிலை நிம்மதியாகி விரைவில் தூங்குவீர்கள்.

எனவே உங்களால் முடிந்தவரை சர்க்கரையை சேர்க்காமல் நீங்கள் உங்கள் உணவுகளை உண்டு பாருங்கள். உங்களுக்குள் ஏற்படுகின்ற மாற்றம் உங்களுக்கே நன்றாக தெரியும்.

---- Advertisement ----