“முழுசா ட்ரெஸ் போட்டாலும் துப்பலாம்ன்னு தோணும்..” – ஆனால், நீச்சல் உடையில் நயன்தாரா.. டிஸ்கோ சாந்தி விளாசல்..!

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி அவர்களுக்கு பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை/ 80 மற்றும் 90களில் சில்க்ஸ்மிதாவுக்கு இணையான பிற பலத்துடன் வலம் வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் பல படங்களில் நடித்தும் நடனமாடியிருக்கிறார் நடிகை டிஸ்கோ சாந்தி.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய டிஸ்கோ சாந்தி நடிகை சில்க் ஸ்மிதாவுடன் நான் மூன்று படங்களில் சேர்ந்து நடித்து இருக்கின்றேன். என்னை சில்க் ஸ்மிதா-வுக்கு மிகவும் பிடிக்கும், சில நேரங்களில் அவருடன் சேர்ந்து நடனம் ஆடிய காட்சிகள் படமாக்கி முடித்தபின் உன்னுடைய நடனம் மிகவும் நன்றாக இருந்தது என்று பொடி வைத்து பேசி விளையாட்டாக என்னை சீண்டுவார்.

யாருடன் எப்படி பழக வேண்டும்.. நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட விஷயங்களையும் தெரிந்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார் நடிகை டிஸ்கோ சாந்தி.

இந்நிலையில், சமீபகாலமாக நடிகைகள் பலரும் உடலோடு ஒட்டிய உடைகளை அணிவது குறித்து பேசிய டிஸ்கோ சாந்தி நடிகை நயன்தாராவுடன் ஒப்பிட்டு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

---- Advertisement ----

அதாவது நடிகைகள் அணியக்கூடிய உடைகள் அவர்களை எந்த வகையிலும் தவறான கண்ணோட்டத்தில் காட்டாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அஜீத் குமாருடன் நடிகை நயன்தாரா பில்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஒரு சில காட்சிகளில் நடிகை நயன்தாரா நீச்சல் உடையில் தோன்றுவார். ஆனால் வக்கிர எண்ணத்தோடு பார்த்தால் கூட முகம் சுழிக்கும் அளவிற்கு அந்த காட்சிகள் இருக்காது. அந்தளவுக்கு கவர்ச்சி தெரியாது.. காரணம் நடிகை நயன்தாரா பார்ப்பதற்கு அழகாக இருந்தார்.. கதையோடு ஒன்றி அப்படியான காட்சிகளை பார்க்கும் போது மோசமான எண்ணம் யாருக்கும் ஏற்படாது.

ஆனால், சில படங்களில் நடிகைகள் உடல் முழுவதையும் ஆடையால் போர்த்திக் கொண்டு வருவார்கள். ஆனால், அந்த அவர்களது உடலை இறுக்கி பிடித்து உடலோடு ஒட்டி இருக்கும்.. இது.. பார்ப்பதற்கே கேவலமாக இருக்கும்.. முகத்தில் துப்பி விடலாம் போன்ற அளவிற்கு எரிச்சலாக இருக்கும் என்று வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகை டிஸ்கோ சாந்தி.

---- Advertisement ----