Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாத்திரம் தேய்க்கும் சோப்பை

“பாத்திரம் தேய்க்கும் சோப்பை இப்படி பயன்படுத்தினால்..!” – மாதம் முழுவதும் யூஸ் பண்ணலாம்..!

நம் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் சோப்பை இன்று வாங்கி வந்தால் இரண்டொரு நாட்களில் எளிதில் கரைந்து போய்விடும். மீண்டும் பாத்திரம் தேய்ப்பதற்கு என புதிதாக சோப்பை வாங்கி வந்தாலும் இதே நிலைமைதான்.

வாரம் ஒரு முறை இப்படி சோப்பு தீர்ந்து போகாமல் இருக்க நீங்கள் சோப்பை பயன்படுத்தும் போது இந்த டெக்னிக்கை ஃபாலோ செய்து பயன்படுத்தினால் மாதம் முழுவதும் பாத்திரம் தேய்க்கும் சோப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.

Soap

எனவே பாத்திரம் தேய்க்கும் சோப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற டெக்னிக்கை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் பாத்திரம் தேய்க்கும் சோப்பை வாங்கி வந்தவுடன் அதை காய்கறிகள் துருவ கூடிய துருவியை எடுத்து  சோப்பை நன்கு துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த சோப்பு துருவலை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு ஸ்பூன் அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

--Advertisement--

Soap

இதனை அடுத்து இந்த சோப்பு துருவல் நன்கு கரைந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி கோதுமை மாவை சேர்த்து அத்தோடு உப்பையும் சேர்க்க வேண்டும். மேலும் லெமன் சால்ட் சிறிதளவும், பேக்கிங் சோடா சிறிதளவும் போட்டு ஒரு டப்பாவில் போட்டு அதை வெயிலில் உலர்த்தி விடுங்கள்.

இவ்வாறு செய்வதின் மூலம் இந்த சோப்பு துருவலானது நன்கு கெட்டியாகி சோப்பு போல் நமக்கு கிடைத்துவிடும். இதை அப்படியே நாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் போது விரைவில் இது கரைந்து போகாமல் நீண்ட நாட்கள் நமக்கு பயன் தரும் வகையில் இருக்கும்.

மேலும் ஒரு மாதம் ஆனாலும் உங்கள் சோப்பு மட்டும் கரையாமல் மீண்டும் பாத்திரம் தேய்க்க பயன்படுவதற்கு இது பயன்படும். மேலும் அதிகமாக கறைபிடித்த பொருட்களில் இருக்கும் கறைகளை எளிதில் நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சோப்பாக இது மாறிவிடும்.

Soap

உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை தேய்ப்பதற்கு என்று தனியாக எந்த ஒரு பொருளையும் நீங்கள் தேடிச் செல்ல வேண்டாம். இதனைக் கொண்டே தேய்த்தால் பள பளவென்று மாறிவிடும்.

மேற்கூறிய குறிப்புக்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீட்டு பாத்திரங்களை தேய்க்க இதுபோல சோப்பை மாற்றிப் செய்து பாருங்கள் கட்டாயம் நீண்ட நாள் உழைக்கும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top