சின்னத்திரையில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா கணேஷ் ( Divya Ganesh ). ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா மதுரையில் கல்லூரியை முடித்த பிறகு வக்கீலாகும் கனவோடு இருந்திருக்கிறார்.
அவருக்கு திடீரென சின்னத்திரை வாய்ப்பு கிடைக்கவே கேளடி கண்மனி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகையான திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூடன் திருமணம் நிச்சயம் நடந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அது திருமணத்தில் முடியவில்லை.
ஆர்.கே.சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த வருத்தத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் திவ்யா, தற்போது விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
வக்கீலாக நினைத்தவர் இன்று பலருக்கும் பிடித்த பாக்கியலெட்சுமி ஜெனியாக வலம் வருகிறார்.
சீரியலில் புடவை சகிதமாக குடும்ப குத்து விளக்காக தோன்றும் இவர் இணையத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.
இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் திவ்யா-வா இது…? என்று வாயடைத்து போயுள்ளனர்.