சைடு பிசினஸாக அந்த தொழில் செய்யும் திவ்யதர்ஷினி..! இதுல மட்டும் மாச வருமானம் மட்டும் இவ்வளவா..

தமிழ் திரைப்படத் துறையில் ஹீரோயின் ரேச்சுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பிடித்த தொகுப்பாளியாக பார்க்கப்படுபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தொகுப்பாளினி டிடி:

குறிப்பாக ஒரு காலகட்டத்தில் டிடியால் தான் டிஆர்பி உச்சத்திற்கு விஜய் டிவி சென்றது. அதனால் தான் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது என்று சொன்னால் கூட அதற்கு மிகையாகாது.

அந்த வகையில் இவர் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக இவரது கலகலப்பான பேச்சும் காமெடியான பேச்சும் வெள்ளந்தியான பேச்சும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

---- Advertisement ----

இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இன்றளவும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக விஜய் டிவியால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்கள் திரைப்படங்கள் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சமீபத்தில் நடக்கும் விஷயங்கள் என பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுவார்கள்.

பிரபலங்கள் பங்கேற்க விரும்பும் டிடியின் நிகழ்ச்சி:

டிடி பிரபலங்களிடம் மிகவும் இலகுவாக பேசி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்கள் குறித்து போட்டு வாங்குவார்.

இதனால் டிடிக்கான தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறார்கள். குறிப்பாக திரை பிரபலங்களும் டிடியின் நேர்காணல் என்றால் யோசிக்காமல் சென்று கலந்து கொள்வார்கள்.

எந்தவிதமான சர்ச்சைகளிலும் இழுத்து விடாமல் பிரபலங்களை மிகவும் நேர்த்தியாக கையாள்வதில் அதிக திறன் கொண்டவர் திவ்யதர்ஷினி.

இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளிலும் சின்ன சின்ன நூல்களில் நடித்து தனது நடிப்புத் திறமையும் வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால் அவருக்கு முழுமையாக பிடித்தது என்னவோ தொகுப்பாளியாக இருந்து வருவதுதான். அண்மையில் கூட பல வருடங்களாக தான் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் தனது காலில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டது என கூறினார்.

அதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீல் சேரிலே பயணித்து வருவதாக கூறி மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தினார்.

காதல் கணவருடன் விவாகரத்து:

இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறினார்கள். டிடி தனது நீண்ட நாள் காதல் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் மிக குறுகிய ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஆம் கடந்து 2017 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்துவிட்டனர்.

இந்நிலையில் டிடிஎன் சொத்து மதிப்பு குறித்தும் அவர் வேறொரு பிசினஸ் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்தும் தற்போது இணையத்தில் தகவல் வெளியாக அது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது டிடியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பங்களா வீடுகள், சொகுசு கார்கள் உள்ளிட்டபையும் அடங்குமாம்.

பணத்தை வாரி குவிக்கும் டிடியின் அந்த தொழில்

இது தவிர அவர் தனியாக பிசினஸும் செய்து அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.

அதாவது ஒரே ஒரு எபிசோடுக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 4 லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

அவர் துபாய் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் கிட்டத்தட்ட 8 லட்சம் வரை சம்பளமாக வாங்குவதாக வெளிவரும் தகவல்கள் கூறுகிறது.

இதன் மூலம் டிடி உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரேட், வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரேட் , வெளிநாடுகளுக்கு ஒரு ரேட் என விதவிதமா ரேட் பேசி கோடிகளில் புரளும் தொகுப்பாளியாக பார்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

---- Advertisement ----