“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ( Divyadarshini ) இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறர்கள் . யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் , யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப் போதன்,சம்யுக்தா ஷண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்திலிருந்து திவ்யதர்ஷினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் ஒரு கதையை உருவாக்கி, படபூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. முழுக்கதையுமே ஊட்டியில் நடைபெறுவது போன்று திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தினை சுந்தர்.சியின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திவ்யதர்ஷினி. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சுந்தர் சி, ஜீவா, ஜெய் புடை சூழ நடுவில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற.. அங்க போகுதே.. உங்க பின்னாடி நிக்குரவர பாத்தா பேயே பயப்படும்.. என்று டபுள் மீனிங்கில் கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.