Connect with us

என்ன சொல்றீங்க..? – சினேகா முதலில் திருமணம் செய்து கொள்ள இருந்தது இவரையா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Sneha

Actress | நடிகைகள்

என்ன சொல்றீங்க..? – சினேகா முதலில் திருமணம் செய்து கொள்ள இருந்தது இவரையா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சினேகா,(Sneha) தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகிற ஒரு நடிகையாக இருக்கிறார். ‘விரும்புகிறேன்’ படத்தில், பிரசாந்த் ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தாய் இல்லாத நிலையில், தந்தை (நாசர்) கட்டுப்பாட்டில் தங்கையை பராமரித்துக்கொண்டு வரும் கிராமத்து பெண்ணாக இதில் நடித்திருந்தார்.

இதில் நடிகை ஈஸ்வரி ராவ் நடிப்பும் பேசும்படி இருந்தது. தீயணைப்பு துறை வீரராக அந்த ஊருக்குள் வந்து பிரசாந்த்ஐ, சினகோ காதலிப்பதும், இருவரது காதலை எதிர்க்கும் அந்த ஊரில், எப்படி அவர்கள் பிரச்னைகளை தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் சினேகா அதிக மேக்கப் இன்றி, இயல்பான அழகில், செமையாக இருந்து, ரசிகர்களை முதல் படத்திலேயே ஈர்த்து விட்டார்.

சினேகா

Sneha

இதையடுத்து என்னவளே, ஆனந்தம், உன்னை நினைத்து, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ், கிங், ஜனா, வசீகரா, புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பாண்டி,கோவா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, போஸ், பார்த்திபன் கனவு, சிலம்பாட்டம் என பல படங்களில், முன்னணி நடிகர்களுடன் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார்.

சினேகாவின் வசீகரமான முக அழகும், நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அங்காடித்தெரு போன்ற சில படங்களில், சில காட்சிகளில் மட்டுமே வரும்படியான, கெஸ்ட் ரோல்களிலும் நடித்தார்.

தமிழில் நடித்ததோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிறமொழிகளிலும், சினேகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அதிலும் நிறைய படங்களில் நடித்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார். மேலும், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும், சேலையாக இருந்தாலும் இரண்டிலுமே சினேகாவின் அழகு, ரசிகர்களை கட்டிப்போட்டது. அதனால், சில படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்தாலும், சினேகா சில படங்களில், கவர்ச்சியிலும் ரசிகர்களை மயக்க தவறவில்லை.

சினேகா

Sneha

ஒரு கட்டத்தில், நடிகர் பிரசன்னாவை காதலித்து, சினேகா திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். ஆனால், இப்போதும் அதே பழைய அழகுடன், மெருகுடன் சினேகா டிவி ஷோக்களில், நடுவராக பங்கேற்று வருகிறார்.

பட்டாஸ், வேலைக்காரன் போன்ற படங்களில், வாய்ப்பு கிடைத்தால் நடிக்கவும் செய்கிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் சினேகா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்கிறார்.

சினேகாவின் அழகை பார்த்து சொக்கிப் போகும் ரசிகர்கள், எத்தனை வயதானாலும், சினேகாவின் அழகு மட்டும் குறையவே, குறையாது என, கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சினேகா

Sneha

இந்நிலையில், சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, அவர் யாரை திருமணம் செய்துகொள்ள இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.அதாவது, பிரபல தொழிலதிபர் ஒருவரை, திருமணம் செய்துகொள்ள சம்மதித்து இருக்கிறார்.

இரு வீட்டார் தரப்பிலும் இதுகுறித்து பேசப்பட்டு, நிச்சயதார்த்தமும் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சினேகாவுக்கும், அந்த தொழிலதிபருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த திருமணம் அப்படியே நின்று போய்விட்டதாக, இப்போது சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனால், அந்த தொழிலதிபர் யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

சினேகா

Sneha

இதில், ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என தொழிலதிபர் கண்டிசன் போட்டிருப்பார். அதனால்தான், திருமணம் நின்று போயிருக்கும் என பலரும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top