Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

இதனால் தான் சூப்பர் ஸ்டார் உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை..! – ரகசியம் உடைத்த சுகன்யா..!

தமிழ் சினிமாவில், பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுகன்யா. (Sukanya )கடந்த 1980, 90 களில், முன்னணி நடிகர்களின் வெற்றிப்படங்கள் பலவற்றில், ஹீரோயின் சுகன்யா தான்.சுகன்யாவின் இயற்பெயர் ஆர்த்தி தேவி. சினிமாவுக்காக சுகன்யா என பெயர் மாற்றப்பட்டார். மாற்றியவர் வேறு யாருமல்ல, இயக்குநர் பாரதிராஜாதான். கடந்த 1972ம் ஆண்டில் பிறந்த இவர், 50 வயதை தற்போது கடந்தவர்.

பெற்றோர் பெயர் ரமேஷ் மற்றும் பாரதி. இவருக்கு கீதா என்ற தங்கை இருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீதர ராஜகோபாலன் என்பவரை மணந்தார். 2003ம் ஆண்டில் விவகாரத்து செய்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்த சுகன்யா, பல விருதுகளை பெற்றிருக்கிறார். இவர், ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 ஆண்டுகளுக்கு மேலாக, சினிமாவில் செம பிஸியாக இருந்த நடிகை இவர்.

சுகன்யா

Sukanya

தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன், பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிசெய்தவர் சுகன்யா. இவரது காலகட்டத்தில் குஷ்பு இவருக்கு கடும் போட்டியாளராக இருந்துள்ளார். சுகன்யா, 5 முறை சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றவர்.கமலுக்கு ஜோடியாக மகாநதி படத்திலும், இந்தியன் படத்திலும் நடித்திருந்தார். அதுவும், அந்த வயதான பாட்டி வேடத்தில் அசத்தி இருந்தார். இந்தியன் தாத்தாவை போலவே, பாட்டியாக வயதான தோற்றத்தில் நடித்த சுகன்யாவின் நடிப்பும் பலத்த கவனத்தை பெற்றது. பிளாஷ் பேக் காட்சியில், சுதந்திர போராட்ட பெண்ணாகவும் அவரது நடிப்பு, சிறப்பாக இருந்தது.

சுகன்யா

Sukanya

பாரதிராஜா இயக்கத்தில், 1991ம் ஆண்டில் வெளிவந்த புதுநெல்லு புது நாத்து படத்தில்தான், சுகன்யா அறிமுகமானார். இந்த படத்தில்தான், நடிகர் நெப்போலியனும் அறிமுகமானார் என்பது கூடுதல் தகவல்.

சின்னக்கவுண்டர், திருமதி பழனிசாமி, சின்ன மாப்ளே, சோலையம்மா, செந்தமிழ் பாட்டு, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், கேப்டன், டூயட், சேனாதிபதி, மகா பிரபு, ஞானப்பழம், கோபுர தீபம், இளவரசன், தம்பி பொண்டாட்டி, கோட்டை வாசல், ஆதித்யன், சீமான், மிஸ்டர் மெட்ராஸ், படங்களில் நடித்தவர். இதில், பல படங்களில் செம ஹிட் ஆன படங்கள்.அக்கா, அண்ணி. அம்மா போன்ற கேரக்டரில், திருமணம் ( சில திருத்தங்களுடன்), முத்து ராமலிங்கம், ஆயுதம் செய்வோம், தொட்டால் பூ மலரும் போன்ற படங்களில், சுகன்யா நடித்திருக்கிறார்.

சுகன்யா

Sukanya

டிவி சீரியல்களில் ஆசியாநெட்டில் சுவாமி ஐயப்பன், சன் டிவியில் ஆனந்தம், ஜன்னல் போன்ற சீரியல்களிலும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர்.கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, பாக்யராஜ், ராமராஜன், சரத்குமார், கார்த்திக் என அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சுகன்யா, ரஜினிகாந்த் உடன் மட்டும் நடிக்கவில்லை. ஆனால், ரஜினியுடன் நடிக்க ஒரு படத்தில் கிடைத்த வாய்ப்பும் ஏதோ குளறுபடியால் அது நடக்காமல் போயுள்ளது. இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுகன்யாவே கூறியுள்ளார்.

சுகன்யா

Sukanya

ஒருமுறை, நான் ஏர்ப்போர்ட் சென்ற போது அங்கு இயக்குநர் கே.எஸ் ரவி்க்குமாரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் என்னிடம் சற்று கோபமாக, திட்டுவதை போல பேசினார். ரஜினியுடன் ஏன் நீங்கள் நடிக்க மறுத்துவிட்டீர்கள் என, என்னைப் பார்த்து திடீரென கேட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை. அவர் டைரக்ட் செய்த முத்து படத்தில், மீனா நடித்த ரங்கநாயகி கேரக்டரில், சுகன்யாவை நடிக்க அவர் திட்டமிட்டு இருந்ததாக கூறி இருக்கிறார்.

சுகன்யா

Rajini

ஆனால், அப்படி ஒரு தகவல் தனக்கு தெரியவே தெரியாது என்றும், ரஜினியுடன் அந்த படத்தில் நடித்திருந்தால் அது மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டமாக, சினிமா பயணத்தில் பெரிய மாற்றமாக அது தனக்கு இருந்திருக்கும் என்றும் கூறி இருக்கிறார்.ஒரே படத்தில், ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு இருந்தும் அதுபற்றிய தகவல் இல்லாததால், வாய்ப்பை இழந்துவிட்டதாக இந்த நேர்காணலில் வருத்தப்பட்டு சொல்லி இருக்கிறார் சுகன்யா.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top