துரதிர்ஷத்தை ஈஸியா தவிர்க்கலாம்..! – இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்..!

வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்கள் நமக்கு நல்ல பலன்களையும், கெடு பலன்களையும் அளிக்கிறது. வீட்டின் வெளி கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களில் கூட வாஸ்து சாஸ்திரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களை பயன்படுத்தும் விதத்திலும் சாஸ்திரங்கள் நமக்கு பல்வேறு விஷயங்களை ரகசியமாக குறிப்பிடுகிறது. அந்த வகையில் வீட்டில் நாம் செய்யும் இந்த தவறுகளால் துரதிருஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மருந்து மாத்திரைகள்

வீட்டின் பிரதான அறையாக இருக்கும் சமையலறையில் எப்பொழுதும் சமையல் பொருட்களும், பூஜை பொருட்களும் இருக்கலாமே தவிர மருந்து பொருட்கள் கட்டாயம் இருக்கக் கூடாது.

மருந்து, மாத்திரைகள், மருந்து சீட்டு போன்ற ஆரோக்கியத்திற்கான விஷயம் என்றாலும், நோயை, வியாதியை எதிர்க்கும் குணம் கொண்டவை.. மருந்து மாத்திரை இல்லா வாழக்கையை தானே விரும்புகிறோம்.. எனவே இது போன்ற எதிர்மறையாக இருக்கும் விஷயங்களை சமையல் அறையில் வைத்தால் வாஸ்து சாஸ்திரப்படி தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பாத்ரூம் கதவில் கவனம்

வீட்டில் பணம் வைக்கும் பீரோ, அலமாரி, பணப்பெட்டி அல்லது பணம் வைக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அந்த பொருளுக்கு பக்கத்தில் துடைப்பம், செருப்பு போன்றவற்றை வைக்க கூடாது. இது மகாலட்சுமியை அவமதிக்கும் ஒரு செயலாகும் எனவே குடும்பத்தில் வறுமை ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

வீட்டில் இருக்கும் கழிவறை அல்லது குளியலறை எதுவாக இருப்பினும் நீங்கள் பயன்படுத்தி விட்டு வந்த பின்பு மூடி வைக்க வேண்டும். குளியல் அறை, கழிவறை போன்றவை திறந்த நிலையில் இருந்தால் அங்கு உங்களுக்கு எதிர்மறை ஆற்றல் பெருகும். இதனால் தொழிலில் குறுக்கீடுகள், மறைமுக எதிரிகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு.

வீட்டின் வடகிழக்கு பகுதியில் குபேர பகவான் ஆட்சி புரிவதால், அங்கு எப்பொழுதும் குப்பை, கூளங்கள் இல்லாமல் ரொம்பவே சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக குப்பை இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தங்குவதில்லை எனவே கூடுமானவரை வீட்டில் இருக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றி விடுங்கள். குறிப்பாக இந்த வடகிழக்கு திசையை கவனியுங்கள்.

ரோடு போட்டுவிடும் கோடு

சுவற்றில் எதையாவது கிறுக்கும் குழந்தைகள் போடும் கோடுகள் கூட வாஸ்து சாஸ்திரத்தின்படி பிரச்சனைகளை உண்டு பண்ணக் கூடியவை தான் எனவே கூடுமானவரை குழந்தைகளை சுவற்றில் கண்டபடி கிறுக்க அனுமதிக்க வேண்டாம். இந்த கோடுகள் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினையை மேலும் அதிகரிக்க செய்யும், விரைவாக கடனை அடைக்க முடியாத சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடும்.

வீட்டின் தெற்குப் பகுதியில் கடவுள் உருவங்கள் பதித்த எந்த ஒரு விஷயமும் அமைந்து இருக்கக் கூடாது. அது போல தண்ணீர் தொடர்பான பொருட்கள் கூட இருக்கக் கூடாது. தண்ணீர் தொட்டி, மீன் தொட்டி, மண் பானை, தண்ணீர் கேன் போன்றவற்றை அந்த திசையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பால் சுரக்கும் செடிகள்

வெள்ளையாக பால் போன்று விஷ திரவம் சுரக்கும் எந்த வகையான செடிகளையும் வீட்டிற்குள் வைக்கக்கூடாது. இதனால் குடும்பத்தில் கசப்புகள் அதிகரிக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதுமட்டுமல்லாமல் படுக்கை அறையில் கடவுள் உருவங்கள் பதித்த எந்த ஒரு பொருளும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இது வாஸ்து சாஸ்திரம் நமக்கு கூறும் சில ரகசிய குறிப்புகள் ஆகும். இவற்றை பின்பற்றி பாருங்கள், குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …