“பொய்யி பொய்யி பொய்யி…” – தீயாய் பரவிய தகவல்..! – பதறிப்போன தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த விளக்கம்..!

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு இசையமைப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையமைப்பில் நிறைய பாடல்கள் வெற்றியடைந்துள்ளது. இப்போது இவர் சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் உருவாகி  வரும் படத்திற்கு இசையமைத்து கொண்டிருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்ததோடு மட்டுமல்லாமல் நேரடி ஒளிபரப்பு காட்சிகளிலும் பாடலோடு நடனமாடி அனைவரின் மனதையும் கொள்ளை அடிக்கக்கூடியவர்.  இவருக்கு என்றே குழந்தைகள் பட்டாளம் உள்ளது. அந்த அளவுக்கு இவர் ஆடும் நடனத்தையும் பாடும் பாடலையும் ரசித்து பார்ப்பார்கள்.

 43 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இவர் தெலுங்கு நடிகையான பூஜிதா பொன்னாடா  என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது.

 இதையடுத்து இந்த தெலுங்கு நடிகை விடுத்த அறிக்கையில் நான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தனக்கும் அவருக்கும் ரகசிய திருமணம் நடக்கவில்லை இது உண்மை என்று அவர் பதிலளித்துள்ளார்.

 யார் இப்படி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும் இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று பரவி வரக்கூடிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் அவர் பதில் அளித்திருக்கிறார்.

 இதன் மூலம் காட்டுத் தீ போல் பரவி வந்த இந்த செய்தியானது தற்போது முடிவுக்கு வந்து முற்றுப் பெற்றுள்ளது என்று கூறலாம்.

யார்  யாருக்கும் கிசுகிசுக்களை கூறுவது என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு புதிராகவே உள்ளது. அந்த வரிசையில் இன்று பரவிவரும் இந்த பரபரப்பான கிசுகிசுக்கள் இவர்கள் இருவரையும் பாதிக்க வில்லை. ஏனென்றால் உடனடியாக நடிகை அதற்குரிய விளக்கத்தை அளித்து விட்டார்.

இனிமேலாவது இதுபோன்ற கிசுகிசுக்களையும் வதந்திகளையும் பரப்பாமல் இருந்தால் நல்லது. தவறு செய்யாதவர்கள் மீது ஒரு தவறு உள்ளது போல் இது மாதிரியான வதந்திகளை பரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மூலம் அனைவருக்கும் நிம்மதியாக இருக்கும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …