நான் இன்னும் அந்த அளவு பெரிய ஆளா வளரல என்னைய ஷாருக்கான் உடன் கம்பேர் பண்ண – துல்கர் சல்மான் பேச்சு!

மலையாள நடிகரான மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இவர் தற்போது உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகளவு காணப்படுகிறது இவரின் மென்மையான நடிப்பால் வளரிளம் பெண்கள் கவரப்பட்டு இவரைப் பின்பற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் தான் சீதா ராமம். இந்த படமானது தமிழ் ஹிந்தி தெலுங்கு  மலையாளம் என்று நான்கு மொழிகளில் படமாக்கப்பட்ட படம் வெளிவந்தது. ஏற்கனவே மலையாளத்தில் நல்ல பெயர் பெற்ற இருக்கக்கூடிய இவருக்கு தற்போது இந்த படத்தில் மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.

 படத்தில் இவர் நடிப்பை பார்த்து அனைவரும் இவரின் நடிப்பில் சாயல் ஷாருக்கானை போல உள்ளது என்று கூறியுள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர்களில் இவர் கட்டாயம் வருவார் என்று கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

 இதைக்கேட்ட துல்கர் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தவர் ஷாருக்கான் என்றும் இவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார் எனவும்  ஷாருக்கானின் குணம் மற்றும் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் போற்றத்தக்கது அனைவரும் பின்பற்றி வாழ வேண்டிய ஒரு அற்புத மனிதர் இவர் என்று கூறினார்.

இதற்கிடையில் சீதா ராமம் படம் ஷாருக்கான் நடித்த வீர் ஜாரா படத்தைப் போல் இருப்பதாகவும் பலரும் கூறியிருக்கின்ற வேலையில் துல்கர் சல்மான்  மிகப்பெரிய நபரான ஷாருக்கானுடன் இணைந்து அல்லது ஒப்பிட்டு தயவு செய்து பேச வேண்டாம் ஏனென்றால் இந்திய திரையுலகில் ஷாருக்கான் என்றால் ஒரு சாருக்கான் மட்டுமே அவருக்கு இணையாக நான் வரமுடியாது என்று பதிலளித்திருக்கிறார்.

 இதனை அடுத்து இவருக்கு தற்போது ஹிந்தியில் பெருமளவு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் துல்கர்  அவரது தந்தையை போலவே மிகவும் பவ்வியமாக நடந்து கொண்ட முறையைப் பார்த்து அனைவரும் பாராட்டுகிறார்கள். நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழிக்கு ஏற்ப தந்தையும் மகனும் இருப்பதாக போற்றுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …