கவலை மற்றும் பதட்டத்தில் இருந்து உங்களை விடுவிக்கும் பத்து வழிகள்.

பிஸியான வாழ்க்கையில் யாருடனும் அமர்ந்து மனம் விட்டு பேசக் கூட நேரம் இல்லாமல் போய் விடுகிறது  பிசியான ஆபீஸ் வேலை, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என அதிக வேலைச்சுமை உடன் உங்கள் மனம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் உறவுகளுக்குள் புரிதல் இல்லாமல் இருப்பது ,உறவினர்களான சண்டை, அலுவலக சம்பந்தமான பிரச்சனைகள் இவைகள் கூட உங்கள் மனச்சுமையை அதிகரிக்கும்.

நீண்ட நாட்கள் இந்த மனஅழுத்தம் தேக்கி வைக்கப் படுவதால் மனநோய் தான் உண்டாகும். இந்த மன அழுத்தத்தில் இருந்தும், கவலையில் இருந்தும், பதட்டத்தில் இருந்தும், விடுபட உங்களுக்கு ஒரு எளிமையான வழி உள்ளது. அதை பற்றி இந்த பகுதியில் நீங்கள் விரிவாக காணலாம் . 

நமது மனதில் இருக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது இருமடங்காகும். கவலையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையும். 

எனவே உங்களது கவலைகளை மற்றவரிடம் மனம் திறந்து சொல்லுங்கள் . அவ்வாறு உங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் உண்மையானவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 

நமக்கு மிகுந்த கவலையை கொடுக்கும் ஒரு விஷயத்தை நினைத்து  மனம் திறந்து அழுவது ஒரு மிகச் சிறந்த விஷயமாகும். உங்களது மனதில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நினைத்து கண்ணீர் சிந்தினால் கண்ணீரோடு சேர்ந்து அந்தப் பிரச்சனையும் கரைந்து போய்விடும்.

பெண்களை விட ஆண்கள் அதிக மன இறுக்கத்திற்கு ஆளாவதற்கு காரணமாக  இந்த அழுகையை சொல்லலாம். ஏனெனில் ஆண்கள் அழுவதே கிடையாது என்பதுதான் உண்மை. எனவே  உங்களின் கவலையை தீர்க்கும் வடிகால் தான் இந்த அழுகை. 

மனதில் இருக்கும் கேள்விகள் தவிப்புகள் கோபங்கள் என மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் உங்களுடனேயே பேசிக் கொள்ளுங்கள், உங்களுக்கான பதிலை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் ,உங்களது மகிழ்ச்சியை கூட ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் உள்ளுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வதால் சிறந்த பலன் கிடைக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. 

ஆராய்ச்சியில் ஒரு மூன்றாம் நபர் உங்களது உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் வேகத்தைவிட உங்களால் உங்களது சொந்த உணர்ச்சியை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாவின் மூலம் வார்த்தைகளால் வழி வெளிப்படுவது குறைவுதான். 

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …